அக்குமோலா பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
அக்மோலா பிராந்தியம் (Akmola Region, காசாக்கு மொழி: Ақмола облысы , اقمولا) என்பது கசக்கஸ்தான் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் கோக்ஷெட்டாவ் நகரம் ஆகும். தேசிய தலைநகரான நூர்-சுல்தான் இப்பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அரசியல் ரீதியாக அக்மோலா பிராந்தியத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மக்கள் தொகை 715,000 ஆகும். இதில் கோக்ஷெட்டா நகரின் மக்கள் தொகை 157,000 ஆகும். பிராந்தியததின் பரப்பளவு 146,200 சதுர கிலோமீட்டர். இந்த பிராந்தியமும், கராகண்டா பிராந்தியம் மட்டுமே கசக்கஸ்தான் நாட்டின் பன்னாடடு எல்லைகளைத் தொடாதவை ஆகும். அக்மோலா பிராந்தியம் வடக்கில் வடக்கு கசக்கஸ்தான் பிராந்தியத்தையும், கிழக்கில் பாவ்லோடர் பிராந்தியத்தையும், தெற்கில் கராகண்டி பிராந்தியத்தையும், மேற்கில் கோஸ்தானே பிராந்தியத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. இப்பகுதியில் தங்கம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சில உள்ளன.
அக்மோலா பிராந்தியம்
| |
---|---|
பிராந்தியம் | |
கசக்கஸ்தான் வரைபடத்தில், அக்மோலா பிராந்தியத்தின் இருப்பிடம் காட்டபட்டுள்ளது | |
ஆள்கூறுகள்: 52°0′N 69°0′E | |
நாடு | கசக்கஸ்தான் |
தலைநகரம் | கோக்ஷெட்டா |
அரசு | |
• அகீம் | மாலிக் முர்சலின் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,46,219 km2 (56,455 sq mi) |
மக்கள்தொகை (2017-06-01)[2] | |
• மொத்தம் | 7,15,000 |
• அடர்த்தி | 4.9/km2 (13/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (not observed) |
அஞ்சல் குறியீடு | 020000 |
தொலைபேசி குறியீடு | +7 (717) |
ஐஎசுஓ 3166 குறியீடு | கேஇசட்-ஏகேஎம் |
வாகனப் பதிவு | 03, C |
மாவட்டங்கள் | 17 |
மாநகரங்கள் | 8 |
நகரியங்கள் | 14 |
ஊர்கள் | 671 |
இணையதளம் | akmo |