From Wikipedia, the free encyclopedia
நியாசின் (Niacin) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: C
6H
5NO
2. இது, உயிர்ச்சத்து பி3, நிகோடினிக் அமிலம் மற்றும் விட்டமின் பிபி என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின், மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
நிகோடினிக் அமிலம் [1] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-3-கார்பாக்சிலிக் அமிலம்[1] | |||
வேறு பெயர்கள்
பயோனிக் உயிர்ச்சத்து பி3 | |||
இனங்காட்டிகள் | |||
59-67-6 | |||
3DMet | B00073 | ||
ATC code | C04AC01 C10AD02 | ||
Beilstein Reference |
109591 | ||
ChEBI | CHEBI:15940 | ||
ChEMBL | ChEMBL573 | ||
ChemSpider | 913 | ||
DrugBank | DB00627 | ||
EC number | 200-441-0 | ||
Gmelin Reference |
3340 | ||
IUPHAR/BPS |
1588 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | D00049 | ||
ம.பா.த | Niacin | ||
பப்கெம் | 938 | ||
வே.ந.வி.ப எண் | QT0525000 | ||
| |||
UNII | 2679MF687A | ||
பண்புகள் | |||
C 6NH 5O 2 | |||
வாய்ப்பாட்டு எடை | 123.1094 g mol-1 | ||
தோற்றம் | வெண்ணிற ஒளிகசியும் படிகங்கள் | ||
அடர்த்தி | 1.473 கி செமீ -3 | ||
உருகுநிலை | 237 °C; 458 °F; 510 K | ||
18 கி லி-1 | |||
காடித்தன்மை எண் (pKa) | 2.201 | ||
காரத்தன்மை எண் (pKb) | 11.796 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4936 | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.1271305813 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-344.9 kJ mol-1 | ||
Std enthalpy of combustion ΔcH |
-2.73083 MJ mol-1 | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | Xi | ||
R-சொற்றொடர்கள் | R36/37/38 | ||
S-சொற்றொடர்கள் | S26, S36 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 193 °செ | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நம் உணவில் ஐந்து விட்டமின்களின் (நியாசினையும் சேர்த்து) அளவு குறைபடுவது பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களுக்குக் காரணமாகிறது: நியாசின் குறைபாடு (தோல் வறட்சி, பெலாகிரா), உயிர்ச்சத்து சி குறைபாடு (அரிநோய்; ஸ்கர்வி), தயமின் குறைபாடு (பெரிபெரி), உயிர்ச்சத்து டி குறைபாடு (என்புருக்கி நோய்) மற்றும் உயிர்ச்சத்து ஏ குறைபாடு (மாலைக்கண் மற்றும் பிற நோயறிகுறிகள்).
நீரில் கரையகூடிய வெண்திண்மமான நியாசின், கார்பாக்சில் (COOH) தொகுதியை மூன்றாமிடத்தில் கொண்ட பிரிடின் கிளைப்பொருளாகும். உயிர்ச்சத்து பி3-யின் பிற வடிவங்கள்: கார்பாக்சில் தொகுதிக்கு பதிலாக கார்பாக்சமைட் (CONH
2) தொகுதியினைக் கொண்ட இதன் அமைடு வடிவமான நிகோடினமைட் (நியாசினமைட்), பிற சிக்கலான அமைடுகள் மற்றும் பல்வேறு மணமியங்கள். ஒத்த உயிரிவேதிப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இக்குடும்பச் சேர்மங்கள், நியாசின், நிகோடினமைட் மற்றும் உயிர்ச்சத்து பி3 என்னும் பெயர்களில் இடைமாற்றமாக உபயோகப்படுத்தபடுகின்றது.
நியாசின் தினமும் தேவைபடுகின்ற அளவுகள் - குழந்தைகள்: 2–12 மிகி, பெண்கள்: 14 மிகி, ஆண்கள்: 16 மிகி, மற்றும் கருவுற்ற (அல்லது) பாலூட்டுகின்ற தாய்மார்கள்: 18 மிகி.[2]. முதிர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமான அதிகபட்ச தேவையளவு: 35 மிகி.
பொதுவாக, நியாசின் அளவுகள் சிறுநீரின் உயிரிக்குறியீடுகளைக் கொண்டு கண்டறியப்படுகிறது.[3] இவை, (இரத்த) ஊனீர் அளவுகளைக்காட்டிலும் சரியானதாக நம்பப்படுகிறது.[4]
அத்தியாவசிய அமினோ அமிலமான டிரிப்டோபானிலிருந்து கல்லீரலால் நியாசினைத் தொகுக்க முடியும். ஒரு மில்லிகிராம் நியாசின் தயாரிக்க அறுபது மில்லிகிராம் டிரிப்டோபான் தேவைப்படுகிறது[2]. டிரிப்டோபானின் ஐந்துருப்பு நறுமண பல்லினவட்டம் பிளவுபடுத்தப்பட்டு, டிரிப்டோபானின் ஆல்ஃபா அமினோ அமிலத்துடன் இணைந்து நியாசினின் ஆறுருப்பு நறுமண பல்லினவட்டமாக மறுசீராக்கப்படுகிறது. டிரிப்டோபான், நிகோடினமைட் அடெனின் டைநியூகிளியோடைடாக மாற்றம்பெறும் சில வினைகளில் ரிபோஃபிளாவின், உயிர்ச்சத்து பி6 மற்றும் இரும்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3-மீத்தைல் பிரிடினிலிருந்து பல மில்லியன் கிலோகிராம் நியாசின் தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு உணவுகளிலும் (கல்லீரல், கோழி, மாட்டிறைச்சி, மீன், தானியங்கள், வேர்க்கடலை (கச்சான்), பயறுவகைகள்) நியாசின் உள்ளது. மேலும், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் முட்டைகளிலுள்ள டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலத்திலிருந்தும் நியாசின் தொகுக்கப்படுகிறது.
விலங்கு பொருட்கள்:
பழங்கள் மற்றும் காய்கறிகள்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.