பயறுவகைகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
நிலக்கடலை (peanut) (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நிலக் கடலை (Arachis hypogaea) | |
---|---|
வேர்க்கடலை (நிலக் கடலை) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மாக்னோலிஃபைடா |
வரிசை: | ஃபேபேலிஸ் |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | ஃபேபுய்டியா |
சிற்றினம்: | அஸ்கினோமேனானியே |
பேரினம்: | அராக்கிஸ் |
இனம்: | ஹைபோஜியா |
இருசொற் பெயரீடு | |
அராக்கிஸ் ஹைபோஜியா லி கரோலஸ் லின்னேயஸ் | |
இதன் தரப்படுதப் பட்ட பெயர்களாக வேர்க்கடலை, நிலக்கடலை ,மணிலாக்கடலை, கடலைக்காய் (கலக்கா), மணிலாக்கொட்டை (மலாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இதற்க்கு கச்சான் என்ற பெயர் இலங்கை,தமிழரிடம் பரவலாக காணப்படுகிறது.
நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
பூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.[1]
உணவாற்றல் | 2385 கிசூ (570 கலோரி) |
---|---|
21 g | |
சீனி | 0.0 g |
நார்ப்பொருள் | 9 g |
48 g | |
நிறைவுற்றது | 7 g |
ஒற்றைநிறைவுறாதது | 24 g |
பல்நிறைவுறாதது | 16 g |
25 g | |
டிரிப்டோபான் | 0.2445 g |
திரியோனின் | 0.859 g |
ஐசோலியூசின் | 0.882 g |
லியூசின் | 1.627 g |
லைசின் | 0.901 g |
மெத்தியோனின் | 0.308 g |
சிஸ்டைன் | 0.322 g |
பினைல்அலனின் | 1.300 g |
டைரோசின் | 1.020 g |
வாலின் | 1.052 g |
ஆர்ஜினின் | 3.001 g |
ஹிஸ்டிடின் | 0.634 g |
அலனைன் | 0.997 g |
அஸ்பார்டிக் அமிலம் | 3.060 g |
குளூட்டாமிக் காடி | 5.243 g |
கிளைசின் | 1.512 g |
புரோலின் | 1.107 g |
செரைன் | 1.236 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (52%) 0.6 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (25%) 0.3 மிகி |
நியாசின் (B3) | (86%) 12.9 மிகி |
(36%) 1.8 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (23%) 0.3 மிகி |
இலைக்காடி (B9) | (62%) 246 மைகி |
உயிர்ச்சத்து சி | (0%) 0.0 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (44%) 6.6 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (6%) 62 மிகி |
இரும்பு | (15%) 2 மிகி |
மக்னீசியம் | (52%) 184 மிகி |
மாங்கனீசு | (95%) 2.0 மிகி |
பாசுபரசு | (48%) 336 மிகி |
பொட்டாசியம் | (7%) 332 மிகி |
துத்தநாகம் | (35%) 3.3 மிகி |
நீர் | 4.26 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன |
நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சிததா மருத்துவ முறையில் இது பித்தத்தை அதிகரிக்கும் குணம் உள்ளது, எனவே அதை சமன் செய்வதறக்காக வெல்லத்துடன் சேர்த்து உண்ணவேண்டும். கடலைமிட்டாய் மிகச்சிறந்த உணவு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.