From Wikipedia, the free encyclopedia
லியூசின் (Leucine) [குறுக்கம்: Leu (அ) L][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
லியூசின் | |||
வேறு பெயர்கள்
2-அமினோ-4- மீதைல் பென்டநோயிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
61-90-5 | |||
ChEMBL | ChEMBL291962 | ||
ChemSpider | 5880 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00030 | ||
பப்கெம் | 6106 | ||
| |||
UNII | GMW67QNF9C | ||
பண்புகள் | |||
C6H13NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 131.18 g·mol−1 | ||
காடித்தன்மை எண் (pKa) | 2.36 (கார்பாக்சில்), 9.60 (அமினோ)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
லியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது.[3]
தசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே.[4] உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5]
L-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது.
உணவு | கி/100கி |
---|---|
சோயா அடர்புரதம் | 4.917 |
வேர்க்கடலை | 1.672 |
முளைவிட்ட கோதுமை | 1.571 |
பாதாம் பருப்பு | 1.488 |
புல்லரிசி (காடைக்கண்ணி) | 1.284 |
சமைத்த அவரை | 0.765 |
சமைத்த பருப்பு வகைகள் | 0.654 |
சமைத்த கொண்டைக் கடலை | 0.631 |
மக்காச்சோளம் | 0.348 |
சாதம் | 0.191 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.