![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/84/AH-64_Apache_in_Daykundi-2012.jpg/640px-AH-64_Apache_in_Daykundi-2012.jpg&w=640&q=50)
தாய்க்குந்தி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
தாய்க்குந்தி (Daykundi தாரி: دایکندی; பஷ்தூ: دایکنډي, வார்ப்புரு:IPA-ps), இது சில சமயங்களில் டாக்குண்டி, தெய்கோண்டி, தெய்கோண்டி அல்லது தயங்குடி என உச்சரிக்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 723,980 ஆகும், இது கசாரா மக்கள் மிகுதியாக வாழும் மாகாணமாகும்.
விரைவான உண்மைகள் தாய்க்குந்திDaykundi Dari: دایکندی பஷ்தூ: دایکنډي, நாடு ...
தாய்க்குந்தி
Daykundi Dari: دایکندی பஷ்தூ: دایکنډي | |
---|---|
மாகாணம் | |
![]() 2012 ஏப்ரலில் கஜ்ரன் மாவட்டத்தில் உள்ள நவா கரே கிராமத்திற்கு அருகே ஒரு துப்பாக்கிச் சூட்டில் 8 வது கமாண்டோ காண்டக் மற்றும் கூட்டணி சிறப்புப் படைகளுக்கு ஆதரவாக ஏஎச்-64 அப்பாச்சி உலங்கு வானூர்தி ஏவுகணை எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டு ஒரு பள்ளத்தாக்கில் சுழல்கிறது. | |
![]() ஆப்கானிஸ்தானின் வரைபடத்தில் தேக்கண்டி மாகாணம் அமைந்துள்ள இடம் | |
ஆள்கூறுகள்: 33.75°N 66.25°E / 33.75; 66.25 | |
நாடு | ஆப்கானித்தான் |
உருவாக்கம் | 2004 |
தலைநகரம் | நிலி |
அரசு | |
• ஆளுநர் | மசாமா முரடி |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,088 km2 (6,984 sq mi) |
மக்கள்தொகை (2012)[2] | |
• மொத்தம் | 7,23,980 |
• அடர்த்தி | 40/km2 (100/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-DAY |
முதன்மை மொழிகள் | கிழக்கு பாரசீக மொழி (ஹஜராஜி மற்றும் தாரி) |
இணையதளம் | http://daikundi.gov.af/ |
மூடு
தாய்க்குந்தி மாகாணமானது பாரம்பரியமாக அசாராசித் மற்றும் கசாரா இனமக்களின் பிராந்தியமாக உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரம் நில்லி என அழைக்கப்படுகிறது. இதன் வடமேற்கில் கோர், வடகிழக்கில் பாமியான் மாகாணம், தென்கிழக்கில் கஜினி மாகாணம், தெற்கில் ஒரூஸ்கான் மற்றும் மேற்குப் பகுதியில் ஹெல்மண்டு மாகாணம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.