From Wikipedia, the free encyclopedia
எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి, பிறப்பு: :திசம்பர் 21, 1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், முன்னாள் முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி | |
---|---|
17வது ஆந்திரப் பிரதேச முதல்வர் | |
பதவியில் 30 மே 2019 – 12 ஜூன் 2024 | |
ஆளுநர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் (2019) பிசுவபூசண் அரிச்சந்தன் (2023-2024) |
முன்னையவர் | நா. சந்திரபாபு நாயுடு |
தொகுதி | புலிவந்தலா |
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
முன்னையவர் | நா. சந்திரபாபு நாயுடு |
பின்னவர் | நா. சந்திரபாபு நாயுடு |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
முன்னையவர் | எ. ச. விஜயலட்சுமி |
தொகுதி | புலிவந்தலா |
இந்தியா நாடாளுமன்றம் கடப்பா | |
பதவியில் 26 மே 2009 – 26 மே 2014 | |
முன்னையவர் | ஒய். எஸ். விவேகானந்த ரெட்டி |
பின்னவர் | ஒய். எஸ். அவிநாஷ் ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 திசம்பர் 1972 புலிவந்தலா, கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (2011-தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2011க்கு முன்பு) |
துணைவர் | ஒய். எஸ். பாரதி |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
பெற்றோர் | எ. சா. ராஜசேகர் (தந்தை) எ. ச. விஜயலட்சுமி (தாய்) |
உறவினர் | எ. ச. சர்மிளா (தங்கை) |
வாழிடம்(s) | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
இவர் திசம்பர் 21, 1972 ஆம் ஆண்டு இந்தியாவின், ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவந்தலா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை எ. சா. ராஜசேகர் மற்றும் தாயார் எ. ச. விஜயலட்சுமி ஆகியோர் ஆவர். இவரது தந்தை எ. சா. ராஜசேகர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இவரது தாய் எ. ச. விஜயலட்சுமி புலிவந்தலா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவர். இவருக்கு எ. ச. சர்மிளா என்னும் தங்கை உள்ளார்.
இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஐதராபாத் பொதுப் பள்ளியில் படித்தார். இவர் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியத் திருச்சபை (ஆங்கிலிக்கம்) கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்.
2004 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் என்னும் கட்சியை 2011 இல் தொடங்கினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரைகளை மேற்கொண்டார்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.[3]
2014 ஆம் ஆண்டில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முதல் தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி அத்தேர்தல்களில் தோல்வியடைந்தது, மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 175 இடங்களில் 67 இடங்களை மட்டுமே வென்றது. அப்போது தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். அத்தேர்தலில் தோல்வியடைந்தாலும், எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இவர் 2012 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு புகாரில் நடுவண் புலனாய்வுச் செயலகம் சோதனைக்கு உள்ளானார். பின்னர் 16 மாதங்கள் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.