செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் ([Serena Jameka Williams] error: {{lang-xx}}: text has italic markup (உதவி), பிறப்பு செப்டம்பர் 26, 1981) முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 39 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவர் வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார்.
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
வாழ்விடம் | பாம் பீச் கார்டன்ஸ், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா [1] |
உயரம் | 5 அடி 10 அங்குலம் (178 சதம மீட்டர்)[1] |
தொழில் ஆரம்பம் | 1995 |
விளையாட்டுகள் | வலது கை; இரண்டு கை பின் அடி |
பரிசுப் பணம் | $19,211,927 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 523-107 |
பட்டங்கள் | 41 |
அதிகூடிய தரவரிசை | 1 (ஜூலை 8, 2002) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வெற்றி (2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017) |
பிரெஞ்சு ஓப்பன் | வெற்றி (2002, 2013, 2015) |
விம்பிள்டன் | வெற்றி (2002, 2003, 2009, 2010, 2012, 2015, 2016) |
அமெரிக்க ஓப்பன் | வெற்றி (1999, 2002,2008, 2012, 2013, 2014) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 166–21 (89.1%) |
பட்டங்கள் | 22 |
அதியுயர் தரவரிசை | 1 (சூன் 7, 2010) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வெற்றி (2001, 2003, 2009,2010) |
பிரெஞ்சு ஓப்பன் | வெற்றி (1999,2010) |
விம்பிள்டன் | வெற்றி (2000, 2002,2008,2009, 2012, 2016) |
அமெரிக்க ஓப்பன் | வெற்றி (1999,2009) |
இற்றைப்படுத்தப்பட்டது: சூன் 25, 2012. |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
மகளிர் டென்னிசு | ||
நாடு ஐக்கிய அமெரிக்கா | ||
2000 சிட்னி | மகளிர் இரட்டையர் | |
2008 பெய்ஜிங் | மகளிர் இரட்டையர் | |
2012 இலண்டன் | மகளிர் இரட்டையர் | |
2012 இலண்டன் | மகளிர் ஒற்றையர் |
மகளிர் டென்னிசு சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் ஆட்டத்தில் முதல் நிலையை ஏழு முறை எட்டியவர். முதன்முதலாக முதல் நிலையை சூலை 8, 2002 இல் பெற்றார்; ஏழாவது முறையாக சனவரி 30, 2017இல் எட்டினார்.[2]
செரீனா கிராண்ட் சிலாம்களில் 39 பட்டங்களைப் பெற்றது சாதனையாகும். 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், இரண்டு கலப்பினப் பட்டங்கள். நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் டென்னிசு ஆட்டக்காரராக திகழ்கிறார். அண்மைக்கால விளையாட்டாளர்களில் இவரே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடைய அக்கா வீனசு வில்லியம்சுடன் இரட்டையர் ஆட்டத்தில் ஒரேநேரத்தில் நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களைப் பெற்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் ஒற்றையர் ஆட்டங்களில் 23 கிராண்ட் சிலாம் வெற்றிகளைப் பெற்றது இவரை ஆறாம் இடத்தில் வைத்துள்ளது.[3] செப்டம்பர் 10, 2012 இல் மகளிர் டென்னிசு சங்கம் கூட்டமைப்பின்படி இவரின் தர வரிசை நான்கு ஆகும் [4], இரட்டையரில் இவரின் தரவரிசை 35 ஆகும்.[5]
செரீனா வில்லியம்ஸ் இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[6] ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் [7]. மற்றெந்த பெண் விளையாட்டாளரை விட மிகக் கூடுதலான பணிவாழ்வு பரிசுத்தொகை வென்றுள்ளார்.[8] தமது சகோதரியுடன் 1998ஆம் ஆண்டு முதல் 23 முறை நேரடியாக விளையாடி 13 முறை வென்றுள்ளார். இவற்றில் எட்டு கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டிகளில் ஆறில் வென்றுள்ளார். ஆறு ஆஸ்திரேலிய ஓப்பன் ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற ஒரே விளையாட்டாளராக, ஆண்/பெண் இருவரிலும், உள்ளார்.