![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Selangor_in_Malaysia.svg/langta-640px-Selangor_in_Malaysia.svg.png&w=640&q=50)
சிலாங்கூர்
மலேசிய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
சிலாங்கூர், (மலாய்:Selangor), மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் இசான' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' என்னும் அரபு மொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம்; தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது.
سلاڠور دار الإحس | |
---|---|
சிலாங்கூர் தாருல் ஏசான் Selangor Darul Ehsan | |
குறிக்கோளுரை: உண்மையும் உறுதிப்பாடும் Dipelihara Allah[1]; By God's Protection | |
பண்: மாட்சிமிகு دولي يڠ مها موليا; Your Royal Highness | |
![]() சிலாங்கூர் மலேசியா | |
ஆள்கூறுகள்: 3°20′N 101°30′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகர் | சா ஆலாம் |
அரசு | |
• சிலாங்கூர் சுல்தான் | சுல்தான் சராபுதீன் இட்ரிஸ் சா (Sharafuddin Idris Shah) |
• மந்திரி பெசார் | டத்தோ ஸ்ரீ அமிருதீன் சாரி பாக்காத்தான் அரப்பான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,104 km2 (3,129 sq mi) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 72,14,400 |
• அடர்த்தி | 780/km2 (2,000/sq mi) |
மனித வளர்ச்சிக் குறியீடு | |
• HDI (2010) | 0.810 (மிகக் கூடுதல்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 40xxx; 48xxx; 60xxx; 68xxx |
மலேசிய தொலைபேசி | 03 |
ஐஎசுஓ 3166 குறியீடு | MY-10 |
மலேசிய பதிவெண்கள் | B |
ம.மே.சு (2021) | ![]() very high · 3-ஆவது |
மொ.உ.உ (பெயரளவு) | 2022 |
• மொத்தம் | ![]() (RM 421.641 பில்லியன்)[4] (1-ஆவது) |
• தனிநபர் | ![]() (RM 59,908)[4] (5-ஆவது) |
மொ.உ.உ (கொ.ஆ.ச) | 2022 |
• மொத்தம் | ![]() |
• தனிநபர் | ![]() |
இணையதளம் | http://www.selangor.gov.my |
ஆகத் தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருந்தன.(சிலாங்கூர் மாநில வரைபடத்தைப் பார்க்கவும்.).
சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக சா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான்.[5] மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாக பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது. மலேசியாவிலேயே மிகவும் பணக்கார மாநிலமாகவும், மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் சிலாங்கூர் மாநிலம் புகழ் பெற்று விளங்குகின்றது.[6]
கிள்ளான் பள்ளத்தாக்கு நவீன மயமாகி வருவதால், சிலாங்கூர் மாநிலம் மிகத் துரிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும், போக்குவரத்து வசதிகளும் மிகச் சிறப்பான உள்கட்டமைப்புகள் கொண்டவை. மலேசியாவிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் சிலாங்கூரில், மக்களின் வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.