From Wikipedia, the free encyclopedia
சாம்பியன்ஸ் லீக் இருபது20 (Champions League Twenty20) என்பது இந்தியா, ஆத்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்.[1] இத்தொடர் அப்போதைய ஐசிசியின் தலைவராக இருந்த என். ஸ்ரீனிவாசன் என்பவரால் நடத்தப்பட்டது.[2]
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
வடிவம் | இருபது20 |
முதல் பதிப்பு | 2009 |
கடைசிப் பதிப்பு | 2014 |
தற்போதைய வாகையாளர் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
அதிகமுறை வெற்றிகள் | மும்பை இந்தியன்ஸ் (இரு முறை) சென்னை சூப்பர் கிங்ஸ் (இரு முறை) |
அதிகபட்ச ஓட்டங்கள் | சுரேஷ் ரைனா (842) |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | சுனில் நரைன் (39) |
வலைத்தளம் | http://clt20.com |
உள்ளூர் இருபது20 போட்டித் தொடர்களின் வெற்றி காரணமாக, முக்கியமாக இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் வெற்றி காரணமாக 2008இல் இப்போட்டித் தொடர் துவங்கப்பட்டது.[3] முதலாவது போட்டித் தொடர் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து 2008 அக்டோபர் முற்பகுதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.[4] ஆயினும் அது தாமதமானது. பின்னர், போட்டித் தொடர் திசம்பர் 3இலிருந்து திசம்பர் 10, 2008 வரை நடைபெறுவதாக இருந்தது.[5] பின்னர், நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதல்கள் காரணமாகப் போட்டித் தொடர் கைவிடப்பட்டது.[6]
முதலாவது போட்டித் தொடர் அக்டோபர் 2009இல் நடைபெற்றது. 170 கோடிக்கு (38.4 மில்லியன் அமெரிக்க டாலர்) விளம்பர ஆதரவு வழங்குவதற்கான உரிமையை இந்தியாவின் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான பார்த்தி ஏர்டெல் வாங்கியது.[7] 2011 போட்டித் தொடர் இந்தியாவில் செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை நடைபெற்றது.[8] ஆகத்து 2011இல் நோக்கியா நிறுவனம் நான்கு வருடங்கள் விளம்பர ஆதரவு வழங்குவதாக ஒப்புக் கொண்டது.[9]
குறைவான பார்வையாளர்கள், ரசிகர்களின் ஆர்வமின்மை, நிலையற்ற விளம்பர ஆதரவுகள் உள்ளிட்ட காரணங்களால் இத்தொடரை உருவாக்கிய மூன்று துடுப்பாட்ட வாரியங்களும் தொடரைக் கைவிடுவதாக அறிவித்தன.எனவே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் இதன் கடைசித் தொடராக அமைந்தது.[10]
ஆண்டு | நடைபெற்ற நாடு | இறுதிப்போட்டி | அணிகள் | மேற். | ||||
---|---|---|---|---|---|---|---|---|
நிகழ்விடம் | வெற்றியாளர் | முடிவு | இரண்டாமவர் | குழு | மொ. | |||
2008 | இந்தியா | சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை | நவம்பர் 2008 மும்பை தாக்குதல்கள் காரணமாகக் கைவிடப்பட்டது | 8 | [11] | |||
2009 | இந்தியா | ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத் | நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ்
159/9 (20 நிறைவுகள்) |
41 ஓட்டங்களால் வெற்றி ஆட்ட விவரம் |
டிரினிடாட் மற்றும் டொபாகோ
118 (15.5 நிறைவுகள்) |
12 | [12][13] | |
2010 | தென்னாப்பிரிக்கா | நியூ வான்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க் | சென்னை சூப்பர் கிங்ஸ்
132/2 (19 நிறைவுகள்) |
8 இழப்புகளால் வெற்றி ஆட்ட விவரம் |
வாரியர்ஸ்
128/6 (20 நிறைவுகள்) |
10 | [14][15] | |
2011 | இந்தியா | சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை | மும்பை இந்தியன்ஸ்
139 (20 நிறைவுகள்) |
31 ஓட்டங்களால் வெற்றி ஆட்ட விவரம் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
108 (19.2 நிறைவுகள்) |
10 | 13 | [16][17] |
2012 | தென்னாப்பிரிக்கா | நியூ வான்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க் | சிட்னி சிக்சர்ஸ்
124/0 (12.3 நிறைவுகள்) |
10 இழப்புகளால் வெற்றி ஆட்ட விவரம் |
ஹைவெல்ட் லயன்ஸ்
121 all out (20 நிறைவுகள்) |
10 | 14 | [18] |
2013 | இந்தியா | பெரோசா கோட்லா அரங்கம், டெல்லி | மும்பை இந்தியன்ஸ்
202/6 (20 நிறைவுகள்) |
33 ஓட்டங்களால் வெற்றி ஆட்ட விவரம் |
ராஜஸ்தான் ராயல்ஸ்
169 (18.5 நிறைவுகள்) |
10 | 12 | [19] |
2014 | இந்தியா | எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் | சென்னை சூப்பர் கிங்ஸ்
185/2 (18.3 நிறைவுகள்) |
8 இழப்புகளால் வெற்றி ஆட்ட விவரம் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
180/6 (20 நிறைவுகள்) |
10 | 12 | [20] |
மூலம்: Cricinfo [21]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.