முத்தையா அண்ணாமலை சிதம்பரம் அரங்கம் அல்லது பொதுவாகச் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ச்சியாகப் போட்டிகள் நடைபெற்றுவரும் மைதானங்களுள் மிகப்பழைய மைதானம் இதுவாகும்.[2] இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் மு. அ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 36,446 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934ஆம் ஆண்டு முதலாவது தேர்வுப் போட்டி நடைபெற்றது.
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | |||||||
மு. அ. சிதம்பரம் மைதானம் | |||||||
அரங்கத் தகவல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | சேப்பாக்கம், சென்னை | ||||||
உருவாக்கம் | 1916 | ||||||
இருக்கைகள் | 36,446 [1] | ||||||
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு | ||||||
குத்தகையாளர் | தமிழ்நாடு அரசு சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கம் | ||||||
முடிவுகளின் பெயர்கள் | |||||||
அண்ணா பவிலியன் முனை வி. பட்டாபிராமன் முனை | |||||||
பன்னாட்டுத் தகவல் | |||||||
முதல் தேர்வு | 10 பெப்ரவரி 1934: இந்தியா எ இங்கிலாந்து | ||||||
கடைசித் தேர்வு | 13–17 பெப்ரவரி 2021: இந்தியா எ இங்கிலாந்து | ||||||
முதல் ஒநாப | 9 அக்டோபர் 1987: இந்தியா எ ஆத்திரேலியா | ||||||
கடைசி ஒநாப | 22 மார்ச் 2023: இந்தியா எ ஆத்திரேலியா | ||||||
முதல் இ20ப | 11 செப்டம்பர் 2012: இந்தியா எ நியூசிலாந்து | ||||||
கடைசி இ20ப | 11 நவம்பர் 2018: இந்தியா v மேற்கிந்தியத் தீவுகள் | ||||||
ஒரே மகளிர் தேர்வு | 7–9 நவம்பர் 1976: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் | ||||||
முதல் மஒநாப | 23 பெப்ரவரி 1984: இந்தியா எ ஆத்திரேலியா | ||||||
கடைசி மஒநாப | 5 மார்ச் 2007: ஆத்திரேலியா எ நியூசிலாந்து | ||||||
முதல் மஇ20ப | 23 மார்ச் 2016: தென்னாப்பிரிக்கா எ அயர்லாந்து | ||||||
கடைசி மஇ20ப | 27 மார்ச் 2016: இங்கிலாந்து எ பாக்கித்தான் | ||||||
அணித் தகவல் | |||||||
| |||||||
22 மார்ச் 2023 இல் உள்ள தரவு மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்போ |
இங்குதான் இந்தியா தேர்வுப் போட்டிகளில் தனது முதல் வெற்றியை 1952ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.
1996இல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.
சாதனைகள்
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வீரேந்தர் சேவாக் தென்னாபிரிக்காவுக்கு எதிராகப் பெற்ற 319 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் சாயிட் அன்வர் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 194 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 652/7d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 83 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி நரேந்திர ஹிர்வானி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 16/136 ஆகும்.
- ராகுல் திராவிட் தேர்வுப் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை இங்கு பூர்த்திசெய்தார்.
- சச்சின் டெண்டுல்கர் தேர்வுப் போட்டியொன்றில் நான்காவது இன்னிங்ஸில் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இங்கு இடம்பெற்றது.
உலகக் கிண்ணம்
1987 உலகக் கிண்ணம்
1996 உலகக் கிண்ணம்
2011 உலகக் கிண்ணம்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.