![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/DUN_Terengganu_2020_v2.svg/langta-640px-DUN_Terengganu_2020_v2.svg.png&w=640&q=50)
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Nerus; ஆங்கிலம்: Kuala Nerus Federal Constituency; சீனம்: 瓜拉尼鲁斯国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P035) ஆகும்.[8]
விரைவான உண்மைகள் கோலா நெருஸ் (P035) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு, மாவட்டம் ...
கோலா நெருஸ் (P035) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kuala Nerus (P035) Federal Constituency in Terengganu | |
![]() கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி (P035 Kuala Nerus) | |
மாவட்டம் | ![]() ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 107,081 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா நெருஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா நெருஸ் மாவட்டம், பத்து ராகிட், ரெடாங் தீவு, கோலா திராங்கானு மாநகராட்சி |
பரப்பளவு | 331 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அலியாஸ் ரசாக் (Alias Razak) |
மக்கள் தொகை | 144,220 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
மூடு
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]