![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/DUN_Johor_2020.svg/langta-640px-DUN_Johor_2020.svg.png&w=640&q=50)
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Tinggi; ஆங்கிலம்: Kota Tinggi Federal Constituency; சீனம்: 哥打丁宜国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P156) ஆகும்.[6]
விரைவான உண்மைகள் கோத்தா திங்கி (P156) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர், மாவட்டம் ...
கோத்தா திங்கி (P156) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kota Tinggi (P156) Federal Constituency in Johor | |
![]() கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (P156 Kota Tinggi) | |
மாவட்டம் | கோத்தா திங்கி மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 57,377 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா திங்கி தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா திங்கி நகரம்; ஜொகூர் லாமா; பாந்தி; பாசிர் ராஜா; செடிலி; பெனாவார்; தஞ்சோங் சூராட் |
பரப்பளவு | 1,446 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) |
மக்கள் தொகை | 61,291 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
மூடு
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]