கோத்தா திங்கி மாவட்டம்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
(கோத்தா திங்கி எனும் பெயரில் கோத்தா திங்கி மாவட்டம்; கோத்தா திங்கி நகரம்] என இரு இடங்கள் உள்ளன.)
கோத்தா திங்கி மாவட்டம் | |
---|---|
ஜொகூர் | |
கோத்தா திங்கி மாவட்டம் அமைவிடம் ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 1°44′N 103°54′E | |
தொகுதி | கோத்தா திங்கி நகரம் |
உள்ளூராட்சி | கோத்தா திங்கி நகராட்சி மன்றம் பெங்கேராங் நகராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ஹாஜி பாரிசால் இஸ்மாயில் Haji Farizal bin Ismail |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,488.7 km2 (1,347.0 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,76,302 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
வாகனப் பதிவு | J |
கோத்தா திங்கி மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kota Tinggi; ஆங்கிலம்:Kota Tinggi District; சீனம்:哥打丁宜县) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
கோத்தா திங்கி நகரம்; கோலா செடிலி (Kuala Sedili); சுங்கை ரெங்கிட் (Sungai Rengit); மற்றும் பெங்கேராங் (Pengerang) பகுதியின் குடியிருப்புகளைக் கோத்தா திங்கி மாவட்ட மன்றம் (Kota Tinggi District Council) நிர்வகிக்கிறது.
பெங்கேராங் பகுதியைத் தளமாகக் கொண்ட தென் பகுதிகளைப் பெங்கேராங் நகராட்சி மன்றம் (Pengerang Municipal Council) நிர்வகிக்கிறது. பெங்கேராங் என்பது கோத்தா திங்கி மாவட்டத்தின் துணை மாவட்டமாகும். 2015-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[1]