கொல்கத்தா பெருநகரப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
கொல்கத்தா பெருநகரப் பகுதி (Kolkata Metropolitan Area), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான கொல்கத்தா பெருநகர் பகுதியானது, தில்லி, மும்பைக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். கொல்கத்தா நகரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்பெருநகர் பகுதியில் கொல்கத்தா மாவட்டம், தெற்கு 24 பர்கானா மாவட்டம், வடக்கு 24 பர்கனா மாவட்டம், நதியா மாவட்டம், ஹவுரா மாவட்டம் மற்றும் ஹூக்லி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம், கொல்கத்தா பெருநகரப் பகுதியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
விரைவான உண்மைகள் கொல்கத்தா பெருநகரப் பகுதி பெருநகர கொல்கத்தா, நாடு ...
கொல்கத்தா பெருநகரப் பகுதி
பெருநகர கொல்கத்தா | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மைய நகரம் | கொல்கத்தா |
மாவட்டங்கள் | கொல்கத்தா மாவட்டம் தெற்கு 24 பர்கானா மாவட்டம் வடக்கு 24 பர்கனா மாவட்டம் நதியா மாவட்டம் ஹவுரா மாவட்டம் ஹூக்லி மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,886.67 km2 (728.45 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,41,12,536 |
• அடர்த்தி | 7,500/km2 (19,000/sq mi) |
• தரம் | 3வது (இந்தியா அளவில்) |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | kmda |
மூடு
கொல்கத்தா பெருநகரப் பகுதியானது 4 மாநகராட்சிகளும், 37 நகராட்சிகளும் கொண்டது.[2][3]