ஹூக்லி மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஹூக்லி மாவட்டம் (Hooghly district) (/ˈhuːɡliː/), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். ஹூக்லி மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் கூக்ளி-சூச்சுரா நகராகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
ஹூக்லிமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | கூக்ளி-சூச்சுரா |
பரப்பு | 3,149 km2 (1,216 sq mi) |
மக்கட்தொகை | 5520389 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,753/km2 (4,540/sq mi) |
படிப்பறிவு | 82.55 % |
பாலின விகிதம் | 958 |
மக்களவைத்தொகுதிகள் | 3 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 16 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 3 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1,500 mm |
[hooghly.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தளம்] |
மூடு
இம்மாவட்டம் 23 காவல் நிலையங்களும், 18 வட்டார வளர்ச்சி அலுவலகங்களும், 12 நகராட்சி மன்றங்களும், ஒரு மாநகராட்சியும், 210 ஊராட்சி மன்றங்களும் கொண்டுள்ளது.[1][2]
ஹூக்லி ஆற்றின் பெயராலேயே இம்மாவட்டம் ஹூக்லி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இம்மாவட்டம் சின்சுரா சதர், செரம்பூர், சந்தன்நகர் மற்றும் ஆரம்பாக் என நான்கு உட்கோட்டங்களை கொண்டுள்ளது