![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b0/Pahang_state_mosque.jpg/640px-Pahang_state_mosque.jpg&w=640&q=50)
குவாந்தான்
From Wikipedia, the free encyclopedia
குவாந்தான் (ஆங்கிலம்: Kuantan; மலாய்: Kuantan; சீனம்: 關丹; ஜாவி: ڤكوانتن); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் ஒரு நகரம். அதுவே அந்த மாநிலத்தின் தலைநகரமாகும். மலேசியாவின் 18-ஆவது பெரிய நகரமான குவாந்தான், ஏறக்குறைய 324 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
விரைவான உண்மைகள் குவாந்தான், நாடு ...
குவாந்தான் | |
---|---|
Kuantan | |
(தலைநகரம்) | |
மேலிருந்து, இடமிருந்து வலமாக: குவாந்தான் ஆற்றின் கரையில் குவாந்தான் நகரம்; சுல்தான் அகமது சா பள்ளிவாசல்; குவாந்தான் 188, குவாந்தான் மாநகராட்சி கட்டடம்; குவாந்தான் நீதிமன்ற வளாகம், தெலுக் செம்பெடாக் கடற்கரை, குவாந்தான் துறைமுகம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°49′N 103°20′E | |
நாடு | ![]() |
மாவட்டம் | குவாந்தான் |
நிறுவல் | 1851 |
அமைவு | 1 ஆகத்து 1913 |
நிர்வாக மையம் | 27 ஆகத்து 1955[1] |
நகராண்மைக் கழகம் | 1 செப்டம்பர் 1979[2] |
குவாந்தான் மாநகராட்சி | 21 பிப்ரவரி 2021 |
அரசு | |
• நகர முதல்வர் | அம்டான் உசேன்[3] |
ஏற்றம் | 22 m (72 ft) |
மக்கள்தொகை (2019) | |
• மொத்தம் | 6,07,778[4] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 25xxx |
போக்குவரத்துப் பதிவெண்கள் | C |
இணையதளம் | http://mpk.gov.my/ |
மூடு
விரைவான உண்மைகள் குவாந்தான் மாநகராட்சிKuantan City CouncilMajlis Bandaraya Kuantan, வகை ...
குவாந்தான் மாநகராட்சி Kuantan City Council Majlis Bandaraya Kuantan | |
---|---|
![]() | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 21 பிப்ரவரி 2021 |
முன்பு | குவாந்தான் நகராட்சி |
கூடும் இடம் | |
குவாந்தான் மாநகராட்சி தலைமையகம் Kompleks Bandaraya Kuantan, Jalan Tanah Putih, 25100 Kuantan, Pahang Darul Makmur, குவாந்தான், பகாங் | |
வலைத்தளம் | |
mbk | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
மூடு
குவாந்தான் மாநகரம், குவாந்தான் ஆற்றுக்கு அருகாமையிலும்; தென் சீனக் கடலை நோக்கியவாறு அமையப் பெற்று இருக்கிறது. பகாங் மாநிலத்தின் நிர்வாக மையம், 1955-ஆம் ஆண்டு வாக்கில் கோலா லிப்பிஸ் நகரில் இருந்து குவாந்தான் மாநகரத்திற்கு மாற்றப்பட்டது.