![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Kuantan_Emblem.svg/langta-640px-Kuantan_Emblem.svg.png&w=640&q=50)
குவாந்தான் மாநகராட்சி
பகாங் மாநிலத்தில்; குவாந்தான்மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
குவாந்தான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuantan; ஆங்கிலம்: Kuantan City Council); (சுருக்கம்: MBK) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில்; குவாந்தான் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் பகாங் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் குவாந்தான் மாநகராட்சிKuantan City CouncilMajlis Bandaraya Kuantan, வகை ...
குவாந்தான் மாநகராட்சி Kuantan City Council Majlis Bandaraya Kuantan | |
---|---|
![]() | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 21 பிப்ரவரி 2021 |
முன்பு | குவாந்தான் நகராட்சி |
தலைமை | |
நகர முதல்வர் | அம்டான் உசேன் Hamdan Hussin 21 பிப்வரி 2021 |
தலைமைச் செயலாளர் | யூசோப் உசேன் Yusoff Husain 21 பிப்வரி 2021 |
கூடும் இடம் | |
குவாந்தான் மாநகராட்சி தலைமையகம் Kompleks Bandaraya Kuantan, Jalan Tanah Putih, 25100 Kuantan, Pahang Darul Makmur, குவாந்தான், பகாங் | |
வலைத்தளம் | |
mbk | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
மூடு
குவாந்தான் மாநகராட்சியின் அதிகார வரம்பு 324 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த மாநகராட்சி, குவாந்தான் மாநகரில உள்ள கோலா குவாந்தான் (Kuala Kuantan), உலு குவாந்தான் (Ulu Kuantan), பெசேரா (Beserah) மற்றும் சுங்கை காராங் (Sungai Karang) ஆகிய நான்கு முக்கிம்களை நிர்வகிக்கிறது.
1955-ஆம் ஆண்டில், பகாங் மாநில அரசாங்கம், தன் நிர்வாக மையத்தை கோலா லிப்பிஸ் (Kuala Lipis) நகரில் இருந்து குவாந்தான் நகருக்கு மாற்றியது.