கிளானா ஜெயா வழித்தடம்
From Wikipedia, the free encyclopedia
கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (ஆங்கிலம்: LRT Kelana Jaya Line அல்லது Kelana Jaya Komuter Line; மலாய்: Laluan Kelana Jaya அல்லது LRT Laluan Kelana Jaya) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[1]
கிளானா ஜெயா வழித்தடம் Kelana Jaya Line | |
---|---|
பொம்பார்டியர் இனோவியா ART 200 ரக தொடருந்து (இடதுபுறம்); இனோவியா மெட்ரோ 300 தொடருந்து (வலதுபுறம்) | |
கண்ணோட்டம் | |
உரிமையாளர் | பிரசரானா மலேசியா |
வழித்தட எண் | (சிவப்புக்கல்) |
வட்டாரம் | கிள்ளான் பள்ளத்தாக்கு |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 37 |
இணையதளம் | myrapid |
சேவை | |
வகை | நடுத்தர திறன் கொண்ட தொடருந்து அமைப்பு |
அமைப்பு | ரேபிட் கேஎல் |
செய்குநர்(கள்) | ரேபிட் தொடருந்து |
பணிமனை(கள்) | சுபாங் கிடங்ககம் |
சுழலிருப்பு | பொம்பார்டியர் இனோவியா ART 200 ரக தொடருந்து & மெட்ரோ 300 266 வண்டிகள் அகலம்: 2.65 மீட்டர் நீளம்: 67.1 மீ & 33.7 மீ |
பயணிப்போர் | 94.658 மில்லியன் (2019) |
வரலாறு | |
திறக்கப்பட்டது | கட்டம் 1: கிளானா ஜெயா - பசார் செனி 1 செப்டம்பர் 1998 கட்டம் 2: கோம்பாக் 1 சூன் 1999 |
கடைசி நீட்டிப்பு | கிளானா ஜெயா - புத்ரா 30 சூன் 2016 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 46.4 km (28.8 mi) |
குணம் | பெரும்பாலும் உயர்த்தப்பட்ட நிலையங்கள் மேற்பரப்பு நிலையங்கள்: செரி ரம்பாய் நிலத்தடி நிலையங்கள்: அம்பாங் பார்க் - மஸ்ஜித் ஜமெயிக் |
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) |
மின்மயமாக்கல் | 750 V DC |
இயக்க வேகம் | 80 km/h (50 mph) |
சமிக்ஞை செய்தல் | Cityflo 650 CBTC |
இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.