From Wikipedia, the free encyclopedia
பசார் செனி நிலையம் அல்லது பசார் செனி எல்.ஆர்.டி. நிலையம் (ஆங்கிலம்: Pasar Seni station அல்லது Pasar Seni LRT station மலாய்: Stesen Pasar Seni அல்லது LRT Pasar Seni சீனம்: 中央艺术坊站) என்பது கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் இலகுத் தொடருந்து நிலையமாகும்.[1]
KJ14 SBK16 பசார் செனி | |
---|---|
இலகு விரைவு தடம் அதிவிரைவு தடம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பசார் செனியை அடுத்து |
உரிமம் | 1. பிரசரனா மலேசியா (Prasarana Malaysia) (LRT) 2. எம்.ஆர்.டி. நிறுவனம் (MRT Corp) (MRT) |
இயக்குபவர் | ரேபிட் கேஎல் |
நடைமேடை | 1 தீவு நடைமேடை |
இருப்புப் பாதைகள் | 2 |
இணைப்புக்கள் | இணைக்கும் நிலையங்கள் KA02 கோலாலம்பூர் தொடருந்து நிலையம்; கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | KJ14 உயர்த்தப்பட்ட நிலையம் KG16 நிலத்தடி |
தரிப்பிடம் | இல்லை |
வரலாறு | |
திறக்கப்பட்டது | செப்டம்பர் 1, 1998 |
பசார் செனி என்பது முன்பு கோலாலம்பூர் மத்தியச் சந்தை (Central Market) என்று அழைக்கப்பட்டது. பெட்டாலிங் சாலைக்கு (Petaling Street) மிக அருகில் இந்த நிலையம் உள்ளது. 1985-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மத்தியச் சந்தை புனரமைப்பு செய்யப்பட்டு பசார் செனி எனும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையமாக மாற்றப் பட்டது.
இதே இடத்தில் தான் பசார் செனி எல்ஆர்டி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை கிளானா ஜெயா தடம் (Kelana Jaya Line); காஜாங் தடம் (Kajang Line) ஆகிய இரு தடங்கள் இணைக்கின்றன.[2]
கெலனா ஜெயா தடம் செப்டம்பர் 1, 1998இல் சுபாங் டெபோவிற்கும் பசார் செனி நிலையத்திற்கும் இடையே துவங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1999இல் பசார் செனி நிலையத்திலிருந்து புத்ரா முனையத்திற்கு விரிவாக்கப்பட்டது. புத்ரா முனையம் தற்போது கோம்பாக் நிலையம் என அறியப்படுகின்றது.
இந்த தொடருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் தொடருந்து நிலையம் 400 மீட்டர் தொலைவில் நடைத்தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் முதன்மையான பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.