![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Kashmir-sat-nasa.jpg/640px-Kashmir-sat-nasa.jpg&w=640&q=50)
காஷ்மீர் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
காஷ்மீர் பள்ளத்தாக்கு (Kashmir Valley), இந்தியா நாட்டின் வடக்கில் அமைந்த ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள காஷ்மீர் பிரதேசத்தில் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்மேற்கில் பீர்பாஞ்சால் மலைத்தொடரும், வடகிழக்கில் இமயமலைத் தொடரும் உள்ளது. 135 கிலோ மீட்டர் நீளமும், 32 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கை, ஜீலம் ஆறு வடிநிலமாகக் கொண்டது.[3]
காஷ்மீர் பள்ளத்தாக்கு | |
---|---|
![]() இடப்புறம் பிர் பாஞ்சல் மலைத்தொடர், வலப்புறம் இமயமலையால் சூழ்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு, | |
அடைபெயர்(கள்): புவியின் சொர்க்கம்[1] | |
நாடு | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டங்கள் | அனந்தநாக், பாரமுல்லா, பட்காம், பந்திபோரா, காந்தர்பல், குப்வாரா, குல்காம், புல்வாமா, சோபியான் மற்றும் ஸ்ரீநகர் |
தலைமையிடம் | ஸ்ரீநகர் |
வரலாற்றுக் கால பிரதேசங்கள் | |
பரப்பளவு | |
• மொத்தம் | 15,948 km2 (6,158 sq mi) |
Dimensions | |
• நீளம் | 135[3] km (83.885 mi) |
• அகலம் | 32[3] km (19.884 mi) |
ஏற்றம் | 1,620[3] m (5,314 ft) |
மக்கள்தொகை (2011[4]) | |
• மொத்தம் | 69,07,622[4] |
• அடர்த்தி | 450.06/km2 (1,165.7/sq mi) |
இனம் | கஷ்மீரிகள் |
இனக்குழுக்கள் மற்றும் மொழிகள் | |
• மொழிகள் | காஷ்மீரி மொழி (பெரும்பான்மை), உருது, பகாரி |
• இனக்குழுக்கள் | காஷ்மீரிகள், பகாரிகள், குர்சார், காஷ்மீர பண்டிதர்கள் |
• சமயங்கள் | 97.16% இசுலாம்,[5] 1.84% இந்து, 0.88% சீக்கியம், 0.11% பௌத்தம்[5] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | வாகனப் பதிவு எண்கள் |
உயர்ந்த கொடுமுடி | மச்சோய் கொடுமுடி (5458 மீட்டர்) |
பெரிய ஏரி | வூலர் ஏரி (260 சகிமீ)[6] |
Longest river | ஜீலம் ஆறு (725 கிமீ)[7] |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று கோட்டங்களில் காஷ்மீர் கோட்டமும் ஒன்றாகும். காஷ்மீர் கோட்டத்தில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெற்கில் ஜம்மு கோட்டமும், கிழக்கில் லடாக் கோட்டமும், மேற்கிலும், வடக்கிலும் எல்லைக் கட்டுப்பாடு கோடுகள் எல்லைகளாக உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு அனந்தநாக், பாரமுல்லா, பட்காம், பந்திபோரா, காந்தர்பால், குப்வாரா, குல்காம், புல்வாமா, சோபியான் மற்றும் ஸ்ரீநகர் என பத்து மாவட்டங்களைக் கொண்டது. [8]