கார உலோக நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
கார உலோக நைட்ரேட்டுகள் (Alkali metal nitrates) என்பவை இலித்தியம், சோடியம், பொட்டாசியம், ருபீடியம், சீசியம் போன்ற கார உலோகங்கள் நைட்ரேட்டு அயனியுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும். இவை ஆல்கலி உலோக நைட்ரேட்டுகள் என்ற பெயராலும் அழைக்கப்படும். சோடியம் நைட்ரேட்டும் பொட்டாசியம் நைட்ரேட்டும் வணிக முக்கியத்துவம் மிக்க நைட்ரேட்டுகளாகும்[1][2]. இவை இரண்டும் வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. நீரில் கரையக்கூடிய இவ்விரு சேர்மங்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு உருகுநிலையைக் கொண்டுள்ளன[3]
மேலதிகத் தகவல்கள் சேர்மம், வேதி வாய்ப்பாடு ...
சேர்மம் | வேதி வாய்ப்பாடு | மோலார் நிறை | உருகுநிலை | |
---|---|---|---|---|
இலித்தியம் நைட்ரேட்டு | LiNO3 | 68.946 கி/மோல் | 255 ° செ (491 °F; 528 K) | |
சோடியம் நைட்ரேட்டு | NaNO3 | 84.9947 கி/மோல் | 308 ° செ (586 °F; 581° K ) | |
பொட்டாசியம் நைட்ரேட்டு | KNO3 | 101.1032 கி/மோல் | 334 ° செ (633 °F; 607 K) | |
ருபீடியம் நைட்ரேட்டு | RbNO3 | 147.473 கி/மோல் | 310 °செ (590 °F; 583 K) | |
சீசியம் நைட்ரேட்டு | CsNO3 | 194.91 கி/மோல் | 414 °செ (777 °F; 687 K) |
மூடு
.