சோடியம் நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் நைட்ரேட்டு (Sodium nitrate) என்னும் வேதிச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NaNO3.ஆகும். இந்த கார உலோக நைட்ரேட்டு உப்பு சிலி சால்ட் பீட்டர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. சிலி நாட்டில் அதிகமாக இது கிடைப்பதால் இதற்கு சிலி சால்ட் பீட்டர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொட்டாசியம் நைட்ரேட்டை பொதுவாக சால்ட் பீட்டர் என்பார்கள். சோடியம் நைட்ரேட்டை இதிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே சிலி சால்ட்பீட்டர் என்று இதை அழைக்கிறார்கள். இதனுடைய கனிம வடிவங்கள் நைட்ரேடின், நைட்ரேடைட் அல்லது சோடா நைட்டர் என்ற பெயர்களால் அறியப்படுகின்றன. சோடியம் நைட்ரேட்டு வெண்மை நிறத்தில் திண்மமாக காணப்படுகிறது. இது தண்ணீரில் மிகவும் நன்றாகக் கரையக்கூடியது ஆகும். நைட்ரேட்டு எதிர்மின் அயனிகளை (NO3−) உடனடியாக கொடுக்கக்கூடிய மூல உப்பாக இது காணப்படுகிறது. இது பல வேதிவினைகளில் பெரிதும் பயன்படுகிறது. உரங்கள், வானவெடிகள், புகைக் குண்டுகள், கண்ணாடி, மண்பாண்ட மிளிரிகள், உணவுபாதுகாப்புப் பொருள்கள், திண்ம ஏவுர்தி உந்திகள் போன்றவற்றை பெருமளவில் தயாரிக்க சோடியம் நைட்ரேட்டு பயன்படுகிறது. திண்ம ஏவுர்தி உந்தி என்ற பயனுக்காகவே இது முக்கியமாகத் தயாரிக்கப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் நைட்ரேட்டு | |||
வேறு பெயர்கள்
பெரு சால்ட்பீட்டர் சோடா நைட்டர் கியூபிக் நைட்டர் | |||
இனங்காட்டிகள் | |||
7631-99-4 Y | |||
ChEMBL | ChEMBL1644698 N | ||
ChemSpider | 22688 Y | ||
EC number | 231-554-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24268 | ||
வே.ந.வி.ப எண் | WC5600000 | ||
| |||
UNII | 8M4L3H2ZVZ Y | ||
UN number | 1498 | ||
பண்புகள் | |||
NaNO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 84.9947 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மையான தூள் அல்லது நிறமற்ற படிகங்கள் | ||
மணம் | இனிப்பு | ||
அடர்த்தி | 2.257 கி/செ.மீ3, திண்மம் | ||
உருகுநிலை | 308 °C (586 °F; 581 K) | ||
கொதிநிலை | 380 °C (716 °F; 653 K) சிதைவடையும் | ||
73 கி/100 மி.லி (0 °செ) 91.2 கி/100 மி.லி (25 °செ) 180 கி/100 மி.லி (100 °செ) | |||
கரைதிறன் | அம்மோனியா மற்றும் ஐதரசினில் மிகவும் கரைகிறது.ஆல்ககாலில் கரைகிறது. பிரிடினில் சிறிதளவு கரைகிறது. அசிட்டோனில் கரைவதில்லை | ||
−25.6·10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.587 (முக்கோணம்) 1.336 (செஞ்சாய்சதுரம்) | ||
பிசுக்குமை | 2.85 cP (317 °செல்சியசு) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | முக்கோணம் மற்றும் செஞ்சாய்சதுரம் | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−467 கிலோயூல்/மோல்[1] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
116 J/(மோல் கெல்வின்)[1] | ||
வெப்பக் கொண்மை, C | 93.05 J/(மோல் கெல்வின்) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிகரணி, எரிச்சலூட்டி | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0185 | ||
ஈயூ வகைப்பாடு | O | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
3236 மில்லிகிராம்/கிலோகிராம் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் நைட்ரைட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | லித்தியம் நைட்ரேட் பொட்டாசியம் நைட்ரேட் ருபிடியம் நைட்ரேட் சீசியம் நைட்ரேட் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||