![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Kumaraswamy.jpg/640px-Kumaraswamy.jpg&w=640&q=50)
எச். டி. குமாரசாமி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அர்தெனஃகல்லி தேவ கவுடா குமாரசாமி (Hardanahalli Deve Gowda Kumaraswamy, கன்னடம்: ಹೆಚ್.ಡಿ. ಕುಮಾರಸ್ವಾಮಿ) (பிறப்பு திசம்பர் 16, 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும், கருநாடகத்தின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். இவர் முதலமைச்சராக பெப்ரவரி 4, 2006 முதல் அக்டோபர் 9, 2007 வரை இருந்தவர். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கவுடாவின் மூன்றாவது மகனாவார். கர்நாடக மாநில ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கன்னட திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக உள்ளார். திரைப்பட வினியோகத் துறையிலும் ஈடுபட்டுள்ள இவர் திரையரங்கு உரிமையாளராகவும் உள்ளார்.
விரைவான உண்மைகள் எச்.டி. குமாரசாமி, 18வது கர்நாடகாவின் முதலமைச்சர் ...
எச்.டி. குமாரசாமி | |
---|---|
![]() | |
18வது கர்நாடகாவின் முதலமைச்சர் | |
பதவியில் 23 மே 2018 – 23 ஜூலை 2019 | |
ஆளுநர் | வாஜ்பாய் வாலா |
முன்னையவர் | பி. எஸ். எடியூரப்பா |
தொகுதி | சானபட்னா |
பதவியில் 03 பெப்ரவரி 2006 – 09 அக்டோபர் 2007 | |
முன்னையவர் | தரம்சிங் |
பின்னவர் | பி. எஸ். எதியூரப்பா |
தொகுதி | ராமநகரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 திசம்பர் 1959 (1959-12-16) (அகவை 64) ஹர்தெனஹல்லி, ஹொலெநரசிப்புரா வட்டம், ஹாசன் மாவட்டம், கருநாடகம் |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
துணைவர்(கள்) | அனிதா குமாரசாமி ராதிகா குமாரசாமி |
பிள்ளைகள் | நிகில் குமார் (நடிகர்) & 1 மகள்[1] |
வாழிடம் | பெங்களூரு |
இணையத்தளம் | www.hdkumaraswamy.co.in |
As of பெப்ரவரி 3, 2006 மூலம்: |
மூடு