From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினர் (Twenty-seventh Dynasty of Egypt or Dynasty XXVII, alternatively 27th Dynasty or Dynasty 27) ஆண்ட பிந்தைய கால எகிப்தை பாரசீக அகாமனிசியப் பேரரசின் மேற்கு எல்லை மாகாணம் என்றும் அழைப்பர். (First Egyptian Satrapy)[8]இருபத்தி ஏழாவது வம்சத்தினர் கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட பாரசீகர்கள் ஆவார். இப்பாரசீக வம்ச பேரரசை, அமியுர்தயுஸ் எனும் எகிப்திய மன்னர் கிமு 404-இல் செய்த பெரும் மக்கள் புரட்சி மூலம் எகிப்தில் உள்ள பாரசீகர்களை விரட்டியடித்து, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தை நிறுவினார்.[9]
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 27-வது வம்சம் 𐎸𐎭𐎼𐎠𐎹 (பழைய பாரசீக மொழியில்-Mudrāya) | |||||
எகிப்திய மாகாணம், அகாமனிசியப் பேரரசு | |||||
| |||||
| |||||
அகாமனிசியப் பேரரசின் மேற்கு மாகாணமாக எகிப்து[1][2][3][4] | |||||
பார்வோன் | |||||
• | கிமு 525-522 | இரண்டாம் காம்பிசெஸ் (முதல்) | |||
• | கிமு 423-404 | இரண்டாம் டேரியஸ் (இறுதி) | |||
வரலாற்றுக் காலம் | அகாமனிசியப் பேரரசுக் காலம் | ||||
• | பெலுசியம் போர் (கிமு 525) | கிமு 525 | |||
• | அமியுர்தயுஸ் புரட்சி | கிமு 404 | |||
கிமு 525-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ், எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்றுவென்று எகிப்தின் பார்வோனாக முடிசூடிக் கொண்டு, எகிப்தை அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 404-இல் எகிப்தின் அகாமனிசியப் பார்வோன் இரண்டாம் டேரியஸ் ஆட்சியின் போது, எகிப்திய வம்சத்தின் அமியுர்தயுஸ் என்பவர் பெரும் கிளர்ச்சி செய்து, எகிப்தில் பாரசீக அகமானிசியப் பேரரசின் ஆட்சி நீக்கி, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.
பார்வோன் பெயர் | உருவம் | ஆட்சிக் காலம் | குறிப்பு | |
---|---|---|---|---|
இரண்டாம் காம்பிசெஸ் | கிமு 525-522 | கிமு 525-இல் எகிப்திய பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்று எகிப்தை கைப்பற்றியவர் | ||
பார்த்தியா | கிமு 522 | சாத்தியமான வஞ்சகர் | ||
மூன்றாம் பெதுபாஸ்திஸ் | கிமு 522/521-520 | அகமானிசியப் பேரரசின் பார்வோனுக்கு எதிராக புரட்சி செய்தவர் | ||
முதலாம் டேரியஸ் | கிமு 522-486 | |||
நான்காம் சாம்திக் | கிமு 480 | அகாமனிசிய பார்வோன்களுக்கு எதிராக புரட்சி செய்தவர் | ||
முதலாம் செர்கஸ் | கிமு 486-465 | |||
அர்தபானஸ் | கிமு 465–464 | முதலாம் செர்கசை கொன்றவர். பின்னர் முதலாம் அர்தசெராக்சால் கொல்லப்பட்டவர். | ||
முதலாம் அர்தசெராக்சஸ் | கிமு 465-424 | |||
இரண்டாம் செராக்சஸ் | கிமு 425-424 | எகிப்தின் அரியணையைக் கோரியவர் | ||
சோக்தியானஸ் | கிமு 424-423 | எகிப்தின் அரியணையக் கோரியவர் | ||
இரண்டாம் டேரியஸ் | கிமு 423-404 | 28=ஆம் வம்ச பார்வோன்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.