From Wikipedia, the free encyclopedia
உலக இளையோர் நாள் (World Youth Day) என்பது இளைஞர்களுக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் நிகழ்வாகும். இது பெரும்பாலும் கத்தோலிக்க சமய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், அனைத்துலக இளைஞர்களும் இன, மத பேதமின்றி பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்[1].
உலக இளையோர் நாள் பன்னாட்டு இளையோர் நாளிலிருந்து வேறுபட்டதாகும்.
உலக இளையோர் நாள் 1984-ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முன்னெடுக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவில் இடம்பெறும். அதை விட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ரீதியில் ஒரு-வார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெறுகிறது. பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர்[2].
2011ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் எசுப்பானியாவின் மத்ரித் மாநகரத்தில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20 வரை நடந்தேறின.
இந்நிகழ்வின் பாதுகாவலர் அரு. அன்னை தெரேசா ஆவார்.
ஐ.நா சபை அனைத்துலக இளையோர் வருடத்தைக் கொண்டாட முடிவுசெய்த போது, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் உலக இளையோர் நாளை கொண்டாட அழைப்பு விடப்பட்டது. இவர் தம் ஆட்சி காலத்தில் செய்தவைகளில் இந்நிகழ்வு மிக முக்கியமானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா முதலிய இடங்களில் உள்ள இளையோர்களை திருயாத்திரை வர இவர் அழைப்பு விடுத்தார்.[3]
இந்நிகழ்வுக்கான நோக்கமாக இவர், இளையோர்கள் தங்கள் வாழ்வின் அழைத்தலை உணர என்ற மையக்கருத்தினை வலியுறுத்தினார். 1985-ஆம் ஆண்டு, முதல் உலக இளையோர் நாளை சிறபிக்க, இவர், உலக இளையோருக்கு (To the Youth of the World) என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்பலி நிகழ்த்திய போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் எசுப்பானியாவின் மாட்ரிட் நகரில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வு 2011 ஆகத்து 16 முதல் 21 வரை நடைபெற்றது. இறுதி நாளன்று ஏறத்தாழ 2,000,000 பேர் வரையில் உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு | நாள் | இடம் | வரவு | கருப்பொருள் |
---|---|---|---|---|
1984 | ஏப்ரல் 15 | ரோம், இத்தாலி | 300,000 | மீட்பின் புனித வருடம்; நம்பிக்கையின் விழா |
1985 | மார்ச் 31 | ரோம், இத்தாலி | 300,000 | உலக இளையோர் வருடம் |
1987 | ஏப்ரல் 11–12 | புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா | 1,000,000 | கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்: அதை நம்புகிறோம். (1 யோவா 4:16) |
1989 | ஆகஸ்ட் 15–20 | சாந்தியாகோ தே கோம்போசுதேலா, எசுப்பானியா | 400,000 | வழியும் உண்மையும் வாழ்வும் நானே (யோவா 14:6) |
1991 | ஆகஸ்ட் 10–15 | செஸ்டகோவா, போலந்து | 1,600,000 | பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள் (உரோ 8:15) |
1993 | ஆகஸ்ட் 10–15 | டென்வர், ஐக்கிய அமெரிக்கா | 900,000 | (நீங்கள்) வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். (யோவா 10:10) |
1995 | ஜனவரி 10–15 | மணிலா, பிலிப்பீன்சு | 4,000,000 | தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவா 20:21) |
1997 | ஆகஸ்ட் 19–24 | பாரிஸ், பிரான்சு | 1,200,000 | ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? - வந்து பாருங்கள் (யோவா 1:38-39) |
2000 | ஆகஸ்ட் 15–20 | ரோம், இத்தாலி | 2,000,000 | வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) |
2002 | ஜூலை 23–28 | டொரண்டோ, கனடா | 800,000 | நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் ... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் (மத் 5:13-14) |
2005 | ஆகஸ்ட் 16–21 | கொலோன், செருமனி | 1,200,000[4][5] | அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத் 2:2) |
2008 | ஜூலை 15–20 | சிட்னி, ஆத்திரேலியா | 400,000[6] | தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று (...) எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். (திப 1:8) |
2011 | ஆகஸ்ட் 15–21 | மத்ரித், எசுப்பானியா | துல்லிய கணக்கெடுப்பு நடத்த எசுபானிய அரசு தடை விதித்தது[7]
அதிகாரப்பூர்வமில்லா கணக்கெடுப்பின் படி சுமார் 1,400,000 முதல் 2,000,000 வரை இருக்கலாம்[8][9]; வத்திக்கானின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் படி 2,000,000.[10] |
அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் (கொலோ 2:7)[11] |
2013 | ஜூலை 23–28 | ரியோ டி ஜனேரோ, பிரேசில்[12] | 3,200,000[13] | நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் (மத் 28:19) |
2016 | 25 - 31 ஜூலை | கிராக்கோவ், போலந்து |
- | இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத் 5:7)[14] |
ஒவ்வோறு ஆண்டும் குருத்து ஞாயிறு அன்று மறைமாவட்ட அளவில் இளையோர் நாள் கொண்டாடப்படுகின்றது.
நாள் | கருப்பொருள் |
---|---|
மார்ச் 23, 1986 | நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள் (1 பேது 3:15) |
மார்ச் 27, 1988 | அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா 2:5) |
ஏப்ரல் 8, 1990 | நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள் (யோவா 15:5) |
ஏப்ரல் 12, 1992 | உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15) |
மார்ச் 27, 1994 | தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவா 20:21) |
மார்ச் 31, 1996 | ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா 6:68) |
ஏப்ரல் 5, 1998 | தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் (யோவா 14:26 ) |
மார்ச் 28, 1999 | தந்தை உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார் (யோவா 16:27) |
ஏப்ரல் 8, 2001 | என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23) |
ஏப்ரல் 13, 2003 | இவரே உம் தாய் (யோவா 19:27) |
ஏப்ரல் 4, 2004 | இயேசுவைக் காண விரும்புகிறோம் (யோவா 12:21) |
ஏப்ரல் 9, 2006 | என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! (திபா) 119:105) |
ஏப்ரல் 1, 2007 | நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவா 13:34) |
ஏப்ரல் 5, 2009 | வாழும் கடவுளை எதிர்நோக்கி வருகின்றோம் (1 திமொ 4:10)[11] |
மார்ச் 28, 2010 | நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? (மாற் 10:17)[11] |
ஏப்ரல் 1, 2012 | ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் (பிலி 4:4) |
ஏப்ரல் 13, 2014 | ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத் 5:3)[14] |
மார்ச் 29, 2015 | தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத் 5:8)[14] |
துவக்கத்திற்கு முன் வரை | செ | பு | வி | வெ | ச | ஞா | |
---|---|---|---|---|---|---|---|
காலை | மறைமாநிலத்தில்:
|
திருப்பயணியர் வருகை மற்றும் வரவேற்பு | பங்கேற்கும் ஆயர்களால் மறைக்கல்வி | திருவிழிப்பு இடத்திற்கு நடை திருப்பயணம் | முடிவு நிகழ்வுகள்:
| ||
பிற்பகல் | துவக்க நிகழ்வுகள்:
|
இசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் | திருத்தந்தையின் வருகை மற்றும் அவரின் வரவேற்புரை | இசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் | திருவிழிப்பு இடத்தில் இசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் | ||
மாலை | இசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் | சிலுவைப் பாதை | திருத்தந்தையோடு மாலை திருவிழிப்பு |
மறைமாவட்ட ஆயர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். குருத்து ஞாயிறு அன்று நடைபெறுவதால் குருத்தோலை ஞாயிறு திருப்பலியும், பாடல்கள், செபம், ஒப்புரவு அருட்சாதனத்தோடு நற்கருணை ஆராதனையும் நடைபெறலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.