அனைத்துலக இளையோர் நாள்

From Wikipedia, the free encyclopedia

அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம். ஐக்கிய நாடுகள் அவையினால் 1999 இல் இந்நாள் இளையோருக்கான சிறப்பு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1]

உசாத்துணை

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.