ஈப்போ
From Wikipedia, the free encyclopedia
ஈப்போ (ஆங்கிலம்: Ipoh; மலாய்: Ipoh; சீனம்: 怡保; ஜாவி: إڤوه); மலேசியா, பேராக் மாநிலத்தின் தலைநகரம்; கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். 'மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம்' என்று போற்றப்படும் இந்த நகரம், கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து வடக்கே 180 கி.மீ; பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரத்தில் இருந்து தெற்கே 123 கி.மீ; தொலைவில் அமைந்துள்ளது.
அடைபெயர்(கள்): கோடீசுவரர்களின் நகரம் போகன்விலா நகரம் [1] | |
ஆள்கூறுகள்: 04°35′50″N 101°04′30″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | கிந்தா மாவட்டம் |
நிறுவல் | 1880 |
நகராண்மைக் கழகத் தகுதி | 31 மே 1962 |
மாநகரக் கழகத் தகுதி | 27 மே 1988 |
அரசு | |
• நகர முதல்வர் | ருமாசி பகரின் (Rumaizi Baharin) |
பரப்பளவு | |
• நகரம் | 643 km2 (248 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• நகரம் | 8,40,000 |
• அடர்த்தி | 1,023/km2 (2,650/sq mi) |
• பெருநகர் | 10,22,240 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 30xxx, 31xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +05 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | A |
இணையதளம் | http://www.mbi.gov.my |
2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட மலேசிய மாநகரங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது.[2]
ஈப்போ நகரத்தைச் சீன மொழியில் பாலோ (Paloh) என்று அழைக்கிறார்கள். 'பாலோ' என்றால் ஈயத்தைத் தோண்டி எடுக்கப் பயன்படுத்தப்படும் ’எக்கி’ என்று பொருள். ”கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமி” எனும் அடைமொழியும் இந்த நகரத்திற்கு உண்டு.[3] இங்கே உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் இடம் என்று பெருமையாகச் சொல்லப் படுவதும் உண்டு.