லிட்டில் இந்தியா, ஈப்போ
ஈப்போ மாநகரில் ஒரு முக்கியமான வணிகத் தளம் / From Wikipedia, the free encyclopedia
லிட்டில் இந்தியா ஈப்போ, (ஆங்கிலம்: Little India, Ipoh; மலாய்: Little India, Ipoh; சீனம்: 小印度,怡保) என்பது மலேசியா, பேராக், ஈப்போ மாநகரில், மலேசிய இந்தியர்கள் கணிசமான அளவில் வணிகம் புரியும் இடங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் லிட்டில் இந்தியாஈப்போ, நாடு ...
லிட்டில் இந்தியா ஈப்போ | |
---|---|
நகர்ப்பகுதி | |
Little India Ipoh | |
ஆள்கூறுகள்: 4°21′36″N 101°24′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாநகரம் | ஈப்போ |
அரசு | |
• நகர முதல்வர் | ருமாயிசி பகரின் Rumaizi Baharin |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 30xxx, 31xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +05 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | A |
மூடு
ஈப்போ மாநகரில் ஒரு முக்கியமான வணிகத் தளமாக இயங்கி வரும் ஈப்போ லிட்டில் இந்தியா, இந்தியர் தொடர்புடைய பல்வேறு விற்பனை மையங்களைக் கொண்டு உள்ளது. அத்துடன் இந்திய இனத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகவும்; இந்தியர்களுக்கான கலாசார மையமாகவும் திகழ்கிறது.