![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Rajasa_Dynasty.svg/langta-640px-Rajasa_Dynasty.svg.png&w=640&q=50)
ஹயாம் வுரூக்
ஜாவானிய மன்னர் / From Wikipedia, the free encyclopedia
ஹயாம் வுரூக் அல்லது ஆயாம் உரூக் (ஆங்கிலம்: Hayam Wuruk அல்லது Pa-ta-na-pa-na-wu; சமசுகிருதம்: हयम् वुरुक्; காவி மொழி:ꦲꦪꦩ꧀ꦮꦸꦫꦸꦏ꧀); (பிறப்பு: 1334; மறைவு: 1389); என்பவர் மயபாகித்தை ஆட்சி செய்த ஒரு சாவக இந்து மன்னார் ஆவார். இவரின் அசல் பெயர் இராயசநகரன் (Rajasanagara) அல்லது பதாரா பிரபு (Bhatara Prabhu).
விரைவான உண்மைகள் ஹயாம் வுரூக், ஆட்சி ...
ஹயாம் வுரூக் | |||
---|---|---|---|
மயபாகித் பேரரசர் | |||
ஆட்சி | மயபாகித் பேரரசு: 1350–1389 | ||
முன்னிருந்தவர் | திரிபுவன விஜயதுங்கதேவி | ||
பின்வந்தவர் | விக்கிரமவர்தனன் | ||
அரசி | பதுகா சாரி (Paduka Sori) | ||
துணைவர் | இற்பரத்தை (வீரபூமியின் தாய்) | ||
| |||
அரச குலம் | இராயச வம்சம் | ||
தந்தை | சக்கரதாரன் | ||
தாய் | திரிபுவன விஜயதுங்கதேவி | ||
பிறப்பு | 1334 மயபாகித் பேரரசு | ||
இறப்பு | 1389 (அகவை 54–55) | ||
சமயம் | சைவம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Rajasa_Dynasty.svg/640px-Rajasa_Dynasty.svg.png)
மயபாகித்தின் நான்காவது பேரரசரான இவர், தன் பிரதமர் கஜ மதன் என்பவரின் உதவியுடன், மயபாகித் பேரரசின் உன்னதமான ஒரு காலக் கட்டத்தில் ஆட்சி புரிந்தார். தன் தாயார் திரிபுவன விஜயதுங்கதேவிக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஹயாம் வுரூக்கிற்குப் பின், அவரின் மருமகன் விக்கிரமவர்தனன் ஆட்சி புரிந்தார்.[1]:234