From Wikipedia, the free encyclopedia
சிரீவெங்கடேசுவரா சுவாமி வாரி பிரம்மோற்சவம் (Srivari Brahmotsavam) அல்லது சிரீவாரி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த[1] வருடாந்திர விழாவாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்தவிழா, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் இந்து மாதமான புரட்டாசி கொண்டாடப்படுகிறது.[2]
இத்திருவிழாவின் போது கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பல வாகனங்களில் வெங்கடாசலபதி சுவாமி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வெங்கடாசலபதி மற்றும் அவரது துணைவியார் சிரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் உற்சவ -மூர்த்தி (ஊர்வல தெய்வம்) சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்படும் விழாவினைக் காண இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி வருகின்றனர். பிரம்மோத்திரம் என்பது பிரம்மாவினை பெருமைப்படுத்தும் விதமாக, நடைபெறும் விழாவாகும். இது திருமலையில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரிய விழாவாகும். [3]
பிரம்மோற்சவம் என்ற சொல் பிரம்மா மற்றும் உற்சவம் (திருவிழா) ஆகிய இரண்டு சமசுகிருத சொற்களின் கலவையாகும் - பிரம்மா முதல் திருவிழாவை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பிரம்மா என்பதற்கு "பெரிய" என்றும் பொருள். [4] சிரீவாரி பிரம்மோற்சவத்தை "வெங்கடேசுவர சலகத்லா பிரம்மோற்சவங்கள்" மற்றும் "வெங்கடேசுவர நவராத்திரி பிரம்மோற்சவங்கள்" என்றும் அழைக்கின்றனர்.
சந்திர நாட்காட்டியில் கூடுதல் மாதம் இருக்கும்போது, இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன: சலக்கட்லா மற்றும் நவராத்திரி. இரண்டு விழாக்களும் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
சலக்கட்லா பிரம்மோற்சவத்தில், எட்டாம் நாள் காலையில் ரத்தோட்சம் எனப்படும் பெரிய தேரோட்டம் நடைபெறுகிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது, எட்டாம் நாள் காலை தங்க தேரோட்டம் (சுவர்ணா ரத்தோட்சவம்) நடைபெறுகிறது. சலக்கட்லா பிரம்மோற்சவத்தில், ஒன்பதாம் நாள் மாலை கொடியை இறக்கும் (துவாசவரோகனம்) உள்ளது. [5]
திருமலை புராணத்தின் படி, பண்டிகையை நடத்துவதற்காகப் பிரம்மா பூமிக்கு இறங்குகிறார். [1] சிரீ வெங்கடேசுவர சகசுவரநாமட்ரா என்பது பிரம்மா நடத்தும் விழாவாகும். சிறிய, காலியான மரத் தேர் மலையப்பசாமிக்கு முன்பாக செல்லும். [6]
திருமலை வெங்கடாசலபதி கோயிலில் திருவிழாக்கள் பற்றிய முதல் குறிப்பு பொ.ச. 966இல் நடைபெற்றது. பல்லவ ராணி சமவாய் நிலத்தைக் கோயிலுக்கு வழங்கி, அதில் வரும் வருவாயில் பண்டிகைகளைக் கொண்டாடக் கட்டளையிட்டார்.[7] 1582 வரை, பிரம்மோற்சவங்கள் ஆண்டுக்கு 12 முறை நடத்தப்பட்டன.
நவராத்திரிக்கு இணையாக நடைபெறும் இந்த பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் முதல் நாளுக்கு முந்தைய மாலையில், அங்குராப்பன சடங்கு (வளமையினைக் குறிக்கும் வகைகள் விதைகளை விதைத்தல்) செய்யப்படுகிறது. பிரமோற்சவ முதல் நாள் கருடக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீன இலக்கனத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுவது வழக்கம் (துவாசாரோகணம்).[8] இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றமே சகல தேவதைகளையும், அட்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, இராட்சச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முப்பத்து முக்கோடி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தைக் காண்பதாக ஐதீகம். இந்நிகழ்விற்கு பின் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர், புதிய பட்டாடைகளை கோயிலுக்கு வழங்குவார்.[9]}} இத்திருவிழாவின்போது தினந்தோறும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தேவியர் சமேதராய் அலங்கரிக்கப்பட்ட 16 வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் வீதியுலா வருவார். ஒவ்வொரு ஆண்டும் திருமலையிலிருந்து திருவில்லிபுத்தூர் கோயிலில் நடைபெறும் ஆண்டாளின் திருமணத்திற்காக மாலைகள் அனுப்பிவைக்கப்டும் நிகழ்வும் நடைபெறும்.[10] ஆறாம் நாளன்று அனுமந்த வாகன சேவை நடைபெறும்.[11]பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையும்[12] தேரோட்டமும் அமைகின்றது. இத்தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். திருவிழாவின் இறுதி நாள் வெங்கடேசுவரரின் பிறந்த நட்சத்திரத்தை நினைவுகூர்கிறது. சுதர்சன சக்கரம் கோவில் தெப்பக்குளத்தில் நீராட்டப்பட்டு பூசை செய்யப்படுகிறது.[13] பக்தர்கள் இறைவனின் அருளினைப்பெறுகிறார்கள். கருடக் கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.