வைக்கிங் 2
From Wikipedia, the free encyclopedia
வைக்கிங் 2 (Viking 2) என்பது நாசாவினால் செவ்வாய் கோளை ஆராய்வதற்காக வைக்கிங் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும். இதுவும் வைக்கிங் 1 மாதிரியான பணியைச் செய்யவே அனுப்பப்பட்டது. [2] இது விண் சுற்றுக்கலன் (orbiter) மற்றும் கோள் இறங்கு விண்கலன் (lander) என இரண்டு பகுதிகளை உடையது. வைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலன் 1316 நாட்கள் (1281 செவ்வாய் நாட்கள்) தனது பணியைச் செய்துள்ளது, ஏப்ரல் 11, 1980 இல் இதன் தேக்க மின்கலங்கள் (Batteries) பழுது ஆனாதால் இதன் பணி முடிந்து விட்டது. ஆனால் இதன் விண் சுற்றுக்கலன் ஜூலை 25, 1978 [2] வரை தனது பணியைச் செய்துள்ளது. சுமார் 16000 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
விரைவான உண்மைகள் இயக்குபவர், முதன்மை ஒப்பந்தக்காரர் ...
வைக்கிங் சுற்றுக்கலன் | |
இயக்குபவர் | நாசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | ஜெட் ப்ரோபுல்சியன் ஆய்வகம் |
திட்ட வகை | விண் சுற்றுக்கலன் |
செயற்கைக்கோள் | செவ்வாய் (கோள்) |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | ஆகஸ்டு 7, 1976[1][2] |
ஏவப்பட்ட நாள் | செப்டம்பர் 9, 1975[1][2] |
ஏவுகலம் | டைடன் IIIE/செண்டூர் |
திட்டக் காலம் | செப்டம்பர் 9, 1975[2] முதல் ஜூலை 25, 1978 வரை[2] 1050 நாட்கள் |
தே.வி.அ.த.மை எண் | 1975-083A |
இணைய தளம் | Viking Project Information |
நிறை | 883 கிகி |
திறன் | 620 வா |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | 0.816299166 |
சேய்மைநிலை | 33176 கிமீ |
அண்மைநிலை | 302 கிமீ |
சுற்றுக்காலம் | 24.08 மணி |
மூடு