விசுவநாதன் ஆனந்த்
இந்திய சதுரங்க விளையாட்டாளர் / From Wikipedia, the free encyclopedia
விசுவநாதன் ஆனந்த் (ஆங்கில மொழி: Viswanathan Anand, பிறப்பு: திசம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா),ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர். இம்மைல்கல்லை இவர் ஏப்ரல் 2006இல் அடைந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சதுரங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்[2].
விரைவான உண்மைகள் விசுவநாதன் ஆனந்த், முழுப் பெயர் ...
விசுவநாதன் ஆனந்த் | |
---|---|
முழுப் பெயர் | விசுவநாதன் ஆனந்த் |
நாடு | இந்தியா |
பிறப்பு | திசம்பர் 11, 1969 (1969-12-11) (அகவை 54) மயிலாடுதுறை, இந்தியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (1988) |
உலக வாகையாளர் | 2000–02 (பிடே) 2007–2013 |
பிடே தரவுகோள் | 2753 (நவம்பர் 2021)[1] |
உச்சத் தரவுகோள் | 2817 (மே 2011) |
தரவரிசை | 16 (நவம்பர் 2021) |
உச்சத் தரவரிசை | 1 |
மூடு