விசில்
ஜே. டி. ஜெரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
விசில் (Whistle) என்பது 2003 ஆம் ஆண்டில் ஜே. டி. ஜெரி இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி திகில் திரைப்படம் ஆகும். இது 1998 இல் வெளியான 'அர்பன் லெஜன்ட்' என்ற ஆங்கில திகில் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இந்த படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்துள்ளார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் காயத்திரி ரகுராம் மற்றும் செரின் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
விரைவான உண்மைகள் விசில், இயக்கம் ...
விசில் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜே. டி. ஜெரி |
தயாரிப்பு | சுஜாதா |
கதை | ஜே. டி. ஜெரி சுஜாதா (வசனம்) |
இசை | டி.இமான் |
நடிப்பு | விக்ரமாதித்யா காயத்திரி ரகுராம் செரின் விவேக் |
ஒளிப்பதிவு | போசியா பாத்திமா |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 4 ஜூலை 2003 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு
விசில் படம் 4 ஜூலை 2003 ஆம் ஆண்டு வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், டி. இமான் இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் விவேக்கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.[2]