விக்டோரியா பொது மண்டபம்
சென்னையில் கட்டப்பட்ட ஆங்கிலேயர் கால பொது பயன்பாட்டுக்கான ஒரு மண்டபம் / From Wikipedia, the free encyclopedia
விக்டோரியா பொது மண்டபம் அல்லது டவுன் ஹால் (Victoria Public Hall) என்பது சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டடம் ஆகும். இக்கட்டடதுக்கு விக்டோரியா மகாராணியின் பெயர் இடப்பட்டது. விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டப்பட்ட இது,[1] பிரித்தானிய கட்டிடக்கலையில், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது ஒரு நாடக அரங்கமாகவும், மாநாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது தற்போது தென்னிந்திய தடகள சங்கத்தின் வசம் உள்ளது.
விரைவான உண்மைகள் விக்டோரியா பொது மண்டபம் Victoria Public Hall, பொதுவான தகவல்கள் ...
விக்டோரியா பொது மண்டபம் Victoria Public Hall | |
---|---|
டவுன் ஹால் | |
The Victoria Public Hall | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | பொதுக் கட்டடம் |
கட்டிடக்கலை பாணி | இந்தோ சாரசெனிக் |
இடம் | சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை |
முகவரி | தமிழ்நாடு, பூங்கா நகர் 600 003 |
கட்டுமான ஆரம்பம் | 1886 |
நிறைவுற்றது | 1888-1890 |
துவக்கம் | 1888-1890 |
செலவு | ₹ 16,425 |
உரிமையாளர் | சென்னை மாநகராட்சி |
மேலாண்மை | விக்டோரியா பப்ளிக் ஹால் அறக்கட்டளை |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 3 |
தளப்பரப்பு | 25,883 sq ft (2,000 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ராபர்ட் சிசோம் |
அமைப்புப் பொறியாளர் | நம்பெருமாள் செட்டியார் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Victoria_Public_Hall_panorama.jpg/640px-Victoria_Public_Hall_panorama.jpg)