From Wikipedia, the free encyclopedia
வல்வெட்டித்துறை நகரசபை (Valvettithurai Urban Council, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.
வல்வெட்டித்துறை நகர சபை | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி |
தலைமை | |
தலைவர் | |
துணைத் தலைவர் | |
உறுப்பினர்கள் | 9 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011 |
வலைத்தளம் | |
valvaicouncil.com |
1983 மே 18 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்::[1]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழர் விடுதலைக் கூட்டணி | 173 | 94.02% | 9 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 7 | 3.80% | 0 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 4 | 2.17% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 184 | 100.00% | 9 | |
செல்லாத வாக்குகள் | 0 | |||
பதிவான மொத்த வாக்குகள் | 184 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 8,954 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 2.05% |
1998 சனவரி 29 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்:[2][3]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழீழ விடுதலை இயக்கம் | 736 | 60.13% | 6 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 283 | 23.12% | 2 | |
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (PLOTE) | 151 | 12.34% | 1 | |
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 54 | 4.41% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 1,224 | 100.00% | 9 | |
செல்லாத வாக்குகள் | 255 | |||
பதிவான மொத்த வாக்குகள் | 1,479 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 11,128 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 13.29% |
23 யூலை 2011 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[4]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 2,416 | 76.36% | 7 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 653 | 20.64% | 2 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 93 | 2.94% | 0 | |
சுயேச்சை | 2 | 0.06% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 3,164 | 100.00% | 9 | |
செல்லாத வாக்குகள் | 230 | |||
பதிவான மொத்த வாக்குகள் | 3,394 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 5,550 | |||
வாக்களித்தோர் | 61.15% |
10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
இலங்கைத் தமிழரசுக் கட்சி | 1,322 | 31.70% | 7 | |
சுயேச்சைக் குழு | 1069 | 25.64% | 4 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 659 | 15.80% | 2 | |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 619 | 14.84% | 2 | |
சிறீ லங்கா சுதந்திரக் கட்சி | 230 | 5.52% | 1 | |
தமிழர் விடுதலைக் கூட்டணி | 187 | 4.48% | 1 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 84 | 2.01% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 4,170 | 100.00% | 19 | |
செல்லாத வாக்குகள் | 42 | |||
பதிவான மொத்த வாக்குகள் | 4,212 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 6,055 | |||
வாக்களித்தோர் | 69.56% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.