வங்காளத்தில் ௧௮௦௦ முதல் ௧௯௩௦ வரையிலான சமூக-கலாச்சார மற்றும் மத சீர்திருத்த இயக்கம் From Wikipedia, the free encyclopedia
வங்காள மறுமலர்ச்சி (Bengal renaissance), (வங்காள மொழி: বাংলার নবজাগরণ; Bāṅlār nabajāgaraṇ; பா³ங்லார் நப³ஜாக³ரண்) பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய, வங்காள அறிஞர்கள், வங்காளப் பண்பாடு, சமூக, கல்வி, கலைத்துறைகளை மறுமலர்ச்சி அடையச் செய்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் இராசாராம் மோகன் ராய் (1772–1833), வங்காளச் சமூகத்தில் உடன்கட்டை ஏறல், விதவைத் திருமணம் போன்ற சமூகத் சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலம், வங்காளத்தில் மறுமலர்ச்சி இயக்கத்தை துவக்கி வைத்தார். 20-ஆம் நூற்றாண்டில் இதனை இரவீந்திரநாத் தாகூர் (1861–1941) முடித்து வைத்தார்.
சத்யஜித் ராய் (1921-1992) போன்றவர்கள் திரைப்படத்துறையில் புதுமையைப் புகுத்தினார்கள். [1] 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சமய, சமூக சீர்திருத்தவாதிகள், பல்துறை அறிஞர்கள், இலக்கிய அறிவாளர்கள், இதழாளர்கள், நாட்டுப் பற்று பேச்சாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இணைந்து வங்காள மறுமலர்ச்சியை துவக்கி வைத்தனர். [2]
பிரித்தானிய இந்தியாவின் குடிமைப்பட்ட வங்காளத்தின் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் பெண்கள், திருமணம், வரதட்சணை, உடன்கட்டை ஏறல், சாதிய அமைப்பு மற்றும் சமயம் தொடர்பாக ஆத்திகர்களிடம் பல கேள்விகள் எழுப்பினர். 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹென்றி லூயிஸ் விவியன் [3] எனும் பிரித்தானிய இளைஞர் தலைமையில், பகுத்தறிவு மற்றும் நாத்திக எண்ணம் படைத்த வங்காள இளைஞர்கள் இளய வங்காளம் (Young Bengal) எனும் சமூக சீர்திருத்த இயக்கத்தை நிறுவினர்.
வங்காளத்தில் சமூக - சமயச் சீர்த்திருத்திற்காக இராசாராம் மோகன் ராய்யால் துவக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பு, வங்காளச் சமூக, கல்வி, சமய மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டது.[4] பின்னாளில் பிரம்ம சமாஜ உறுப்பினர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் வங்காள இலக்கியம் பெருமளவில் வளர்ச்சியுற்றது. கல்விக்கு அடித்தளமிட்ட இராசாராம் மோகன் ராய் மற்றும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரை அடுத்து வந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத்சந்திர சட்டோபாத்யாயா, இரவீந்திரநாத் தாகூர் போன்றவர்கள் வங்காள இலக்கியத்தை விரிவுப்படுத்தினர்.[5]
இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்திநிகேதன் எனும் கல்வி நிறுவனம் கல்வித் துறையை சீரமைத்தது.[6]
சத்தியேந்திர நாத் போசு, அனில் குமார் கெயின் [7] பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, ஜகதீஷ் சந்திர போஸ், மேகநாத சாஃகா போன்ற அறிவியலாளர்கள் வங்காள மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றனர்.
வங்காள வரலாற்று அறிஞரான ரமேஷ் சந்திர தத் கூறுகிறார்:[8]
வங்காளத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், சமயம் மற்றும் சமூக எண்ணங்கள் மற்றும் கருத்துக்களில் அதிக புரட்சியை தூண்டியது ... கடவுளர்கள் மற்றும் தேவதைகள், அரசர்கள் மற்றும் ராணிகள் மற்றும் இளவரசர்கள் கதைகளிலிருந்து, வாழ்க்கையின் எளிய நடத்தை முறைகளைக கற்றுக் கொள்ளவேண்டும். மேலும் குடிமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்... ஒவ்வொரு புரட்சியிலும் மக்கள் வீரியத்துடன் கலந்து கொள்வது என்பது தற்போதைய ஆங்கிலேயர் ஆட்சி விதிவிலக்கு அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் வங்காள இலக்கிய இலக்கியத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் வரிசையில இராசாராம் மோகன் ராய், அட்சய குமார் தத், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தோரு தத், மைக்கேல் மதுசூதன் தத், ஹேம சந்திரா பானர்ஜி, ரமேஷ் சந்திர மஜும்தார், சத்யஜித் ராய் மற்றும் தீன பந்து மித்ரா உள்ளனர். தற்போதைய 20ம் நூற்றாண்டில், 1975 வரையிலான கால கட்டத்தில் வங்காள இலக்கியத்தில் முதல் முறையாக உரைநடை, வெற்று உரை, வரலாற்று புனைவுகள் மற்றும் நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன ...
வங்காள மறுமலர்ச்சி காலத்தில் இந்து சமயத்திற்கும், ஆன்மீகத்திற்கும் தொண்டாற்றியவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள்; சைதன்யர், ராம்பிரசாத் சென், இராமகிருஷ்ணர், பரமஹம்ச யோகானந்தர், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சகோதரி நிவேதிதை, அரவிந்தர், பக்தி சித்தாந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென் ஆனந்தமாயி மா மற்றும் பலர் ஆவார்.
இந்திய விடுதலை இயக்கத்திற்கு புத்துயிர்யூட்டி, விடுதலைப் போராட்டத்தை எழுச்சியூட்டியர்களில் குறிப்ப்பிட்டத்தக்கவர்கள்; உமேஷ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திர பால், சரத் சந்திர போசு, சித்தரஞ்சன் தாஸ், அரவிந்தர், ராஷ் பிஹாரி போஸ், கமலாதேவி சட்டோபாத்யாய், சுபாஷ் சந்திர போஸ், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் ஜத்தீந்திர நாத் தாஸ் மற்றும் குதிராம் போஸ்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.