வங்கதேசத்தின் தேசியக் கவி From Wikipedia, the free encyclopedia
காஜி நசருல் இசுலாம் (பெங்காலி: কাজী নজরুল ইসলাম ஆங்கிலம்:Kazi Nozrul Islam) (பிறப்பு மே 25 1899; மறைவு ஆகத்து 29 1976) வங்காளக் கவிஞர் ஆவார். சிறந்த இசைஞானத்துடன் இவர் இயற்றியுள்ள கவிதைகள் புரட்சிகரமானவை. பாசிசத்திற்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இவர் தனது கவிதைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தினார். தனது கவிதைகளின் வீச்சாலும், தேசிய விடுதலைப் போராட்டத்தில் அளித்த பங்களிப்புக்காகவும் இன்று வரை வங்காளத்தின் புரட்சிக்கவியாக அறியப்படுகிறார்.
காஜி நசருல் இசுலாம் | |
---|---|
பிறப்பு | புர்துவான் மாவட்டம், மேற்கு வங்காளம் | 25 மே 1899
இறப்பு | 29 ஆகத்து 1976 77) டாக்கா, வங்காளதேசம் | (அகவை
காலம் | 20ம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | இந்திய மெய்யியல் |
பள்ளி | அனாபியும் சுன்னி இசுலாமும் |
முக்கிய ஆர்வங்கள் | கவிதை, இசை, அரசியல், சமூகம் |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
குழந்தைகளுக்கான இவருடைய கவிதைகள் கற்பனை நிறைந்ததாகவும் உணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்தன. மதச்சார்பற்ற கொள்கையாளராகவும் இவர் விளங்கினார். [1] வங்கத்தில் வாழ்ந்த கிறித்தவ மக்களைப் பற்றித் தமது புதினத்தில் எழுதினார். ஆங்கிலம், எபிரேயம், போர்த்துக்கீசம் ஆகிய மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன.
1960 இல் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. வங்கதேச அரசு 1972 இல் இவருக்கு "தேசியக் கவி" என்ற பட்டம் அளித்துக் கௌரவித்தது. [2][2][3][3] மேற்கு வங்காளம் அசன்சாலில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. வங்காள தேசத்தில் ஜட்டிய கபி காஜி நசுருல் இசுலாம் பல்கலைக்கழகம் உருவானது. மேற்கு வங்காளத்தின் ஆண்டலில் வானூர்தி நிலையத்திற்கு இவரது பெயர் வைக்கப் பட்டது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் இவர் நினைவாக ஓர் இருக்கை ஏற்படுத்தப்பட்டது. நசுருல் தீர்த்தா என்ற பெயரில் மேற்கு வங்க அரசு பண்பாட்டுக் கல்வி மையத்தை நிறுவியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.