அல்லாஹ்(Allah)என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது. அதை போன்றே பன்மையும் இல்லை. இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.

'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.

பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைபெறச் செய்தது. "பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்". (அல் குர்ஆன் 38:5)

அல்லாஹ்வை பற்றி குர்ஆன்

குர்ஆன் அல்லாஹ்வை பற்றி பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், கீழ் காணும் குர்ஆனின் 112-வது அத்தியாயம் இவ்வாறு கூறுகிறது. بسم الله الرحمن الرحيم

(112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஏகன்.

(112:2) اللَّهُ الصَّمَدُ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

(112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

(112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இந்த நான்கு பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவன் இறைவனாக ( அர்ஷின் அதிபதி) முடியாது.

பிற மத வேதங்களில் 'அல்லாஹ்'

அல்லாஹ்வை பற்றி குர்ஆன் மட்டும் பேசவில்லை மாறாக உலகின் பிற மத வேதங்களும் எடுத்தியம்புகின்றன என்பதற்கு சான்றுதான் அதில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் பெயர்கள். விவிலியம்(புனித விவிலியம்): உலகம் முழுவதிலும் உள்ள கிறித்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் விவிலியத்தில் அல்லாஹ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மத்தேயு, 27:46)
Eli, Eli, lama sabachtani?" My God, my God, why have you forsakenme?" (Mathew, 27:46)

பொருள் : தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்

மேற்காணும் வசனங்களின் மூல மொழியான ஹிப்ரூ மொழியோடு வைத்து ஆராய்ந்தும் ஒப்பிட்டும் பார்த்தால் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட மூல விவிலியத்தில் Elohim" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல கிறித்துவ அறிஞர்களின் விளக்கங்களின் படி 'EL' அல்லது 'Elah' என்பது இறைவனைக்குறிக்கும் எனவே ஆங்கிலத்தில் இதை 'Alah' என்றுதான் உச்சரிக்க வேண்டும் இது இசுலாமியர்களால் அழைக்கப்படும் இறைவனின் பெயரான 'Allah' க்குறிக்கும் என்கின்றனர்.[1][நம்பகமற்றது ]

கலிமா

لا إله إلا الله محمد رسول الله

தமிழில்: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

பொருள்: (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்.

"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் இறுதித்தூதர்" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்

விளக்கம்: '(لا)லா' என்பதற்கு இல்லை என்று பொருள் , '(إله)இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'(إلا)இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், '(الله)அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். '(محمد)முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். '(رسول)ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள். ஆக "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்" என்று பொருள்.

பண்புகள்

அல்லாஹ் தன்னை பற்றி புனிதமிகு குர்ஆன்(இறை வேதத்தில்) அறிமுகம் செய்யும்பொழுது தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்வின் திருநாமங்கள் (أسماء الله الحسنى) 'அஸ்மாஹுல் ஹுஸ்னா' எனப்படும் அவை 99 ஆகும். அவையாவன.

மேலதிகத் தகவல்கள் பெயர்(அரபி மொழியில்), மொழி பெயர்ப்பு(ஆங்கிலத்தில்) ...
பெயர்(அரபி மொழியில்)மொழி பெயர்ப்பு(ஆங்கிலத்தில்)ஆங்கிலத்தில்தமிழில்
اللهThe Greatest NameAllahஅல்லாஹ்
الرحمنThe All-CompassionateAr-Rahmanஅளவற்ற அருளாளன்
الرحيمThe All-MercifulAr-Rahimநிகரற்ற அன்புடையோன்
الملكThe Absolute RulerAl-Malikஉண்மையான அரசன்
القدوسThe Pure OneAl-Quddusதூய்மையாளன்
السلامThe Source of PeaceAs-Salamசாந்தி அளிப்பவன்
المؤمنThe Inspirer of FaithAl-Mu'minஅபயமளிப்பவன்
المهيمنThe GuardianAl-Muhayminஇரட்சிப்பவன்
العزيزThe VictoriousAl-Azizமிகைத்தவன்
الجبارThe CompellerAl-Jabbarஅடக்கியாள்பவன்
المتكبرThe GreatestAl-Mutakabbirபெருமைக்குரியவன்
الخالقThe CreatorAl-Khaliqபடைப்பவன்
البارئThe Maker of OrderAl-Bari'ஒழுங்கு செய்பவன்
المصورThe Shaper of BeautyAl-Musawwirஉருவமைப்பவன்
الغفارThe ForgivingAl-Ghaffarமிக மன்னிப்பவன்
القهارThe SubduerAl-Qahharஅடக்கி ஆள்பவன்
الوهابThe Giver of AllAl-Wahhabகொடைமிக்கவன்
الرزاقThe SustainerAr-Razzaqஉணவளிப்பவன்
الفتاحThe OpenerAl-Fattahவெற்றியளிப்பவன்
العليمThe Knower of AllAl-`Alimநன்கறிந்தவன்
القابضThe ConstrictorAl-Qabidகைப்பற்றுபவன்
الباسطThe RelieverAl-Basitவிரிவாக அளிப்பவன்
الخافضThe AbaserAl-Khafidதாழ்த்தக்கூடியவன்
الرافعThe ExalterAr-Rafiஉயர்வளிப்பவன்
المعزThe Bestower of HonorsAl-Mu'izzகண்ணியப்படுத்துபவன்
المذلThe HumiliatorAl-Mudhillஇழிவுபடுத்துபவன்
السميعThe Hearer of AllAs-Samiசெவியுறுபவன்
البصيرThe Seer of AllAl-Basirபார்ப்பவன்
الحكمThe JudgeAl-Hakamஅதிகாரம் புரிபவன்
العدلThe JustAl-`Adlநீதியாளன்
اللطيفThe Subtle OneAl-Latifநுட்பமானவன்
الخبيرThe All-AwareAl-Khabirஉள்ளூர அறிபவன்
الحليمThe ForbearingAl-Halimசாந்தமானவன்
العظيمThe MagnificentAl-Azimமகத்துவமிக்கவன்
الغفورThe Forgiver and Hider of FaultsAl-Ghafurமன்னிப்பவன்
الشكورThe Rewarder of ThankfulnessAsh-Shakurநன்றி அறிபவன்
العليThe HighestAl-Aliமிக உயர்ந்தவன்
الكبيرThe GreatestAl-Kabirமிகப்பெரியவன்
الحفيظThe PreserverAl-Hafizபாதுகாப்பவன்
المقيتThe NourisherAl-Muqitகவனிப்பவன்
الحسيبThe AccounterAl-Hasibவிசாரணை செய்பவன்
الجليلThe MightyAl-Jalilமகத்துவமிக்கவன்
الكريمThe GenerousAl-Karimசங்கைமிக்கவன்
الرقيبThe Watchful OneAr-Raqibகாவல் புரிபவன்
المجيبThe Responder to PrayerAl-Mujibஅங்கீகரிப்பவன்
الواسعThe All-ComprehendingAl-Wasiவிசாலமானவன்
الحكيمThe Perfectly WiseAl-Hakimஞானமுள்ளவன்
الودودThe Loving OneAl-Wadudநேசிப்பவன்
المجيدThe Majestic OneAl-Majeedபெருந்தன்மையானவன்
الباعثThe ResurrectorAl-Ba'ithமறுமையில் எழுப்புபவன்
الشهيدThe WitnessAsh-Shahidசான்று பகர்பவன்
الحقThe TruthAl-Haqqஉண்மையாளன்
الوكيلThe TrusteeAl-Wakilபொறுப்புள்ளவன்
القوىThe Possessor of All StrengthAl-Qawiyyவலிமை மிக்கவன்
المتينThe Forceful OneAl-Matinஆற்றலுடையவன்
الوليThe GovernorAl-Waliyyஉதவி புரிபவன்
الحميدThe Praised OneAl-Hamidபுகழுடையவன்
المحصىThe AppraiserAl-Muhsiகணக்கிடுபவன்
المبدئThe OriginatorAl-Mubdi'உற்பத்தி செய்பவன்
المعيدThe RestorerAl-Mu'idமீளவைப்பவன்
المحييThe Giver of LifeAl-Muhyiஉயிரளிப்பவன்
المميتThe Taker of LifeAl-Mumitமரிக்கச் செய்பவன்
الحيThe Ever Living OneAl-Hayyஎன்றும்உயிரோடிருப்பவன்
القيومThe Self-Existing OneAl-Qayyumஎன்றும்நிலையானவன்
الواجدThe FinderAl-Wajidஉள்ளமையுள்ளவன்
الماجدThe GloriousAl-Majidபெருந்தகை மிக்கவன்
الواحدThe One, the All Inclusive, The IndivisibleAl-Wahidதனித்தவன்
احدThe OneAl-Ahadஅவன் ஒருவனே
الصمدThe Satisfier of All NeedsAs-Samadதேவையற்றவன்
القادرThe All PowerfulAl-Qadirஆற்றலுள்ளவன்
المقتدرThe Creator of All PowerAl-Muqtadirதிறமை பெற்றவன்
المقدمThe ExpediterAl-Muqaddimமுற்படுத்துபவன்
المؤخرThe DelayerAl-Mu'akhkhirபிற்படுத்துபவன்
الأولThe FirstAl-Awwalஆதியானவன்
الآخرThe LastAl-Akhirஅந்தமுமானவன்
الظاهرThe Manifest OneAz-Zahirபகிரங்கமானவன்
الباطنThe Hidden OneAl-Batinஅந்தரங்கமானவன்
الواليThe Protecting FriendAl-Waliஅதிகாரமுள்ளவன்
المتعالThe Supreme OneAl-Muta'aliமிக உயர்வானவன்
البرThe Doer of GoodAl-Barrநன்மை புரிபவன்
التوابThe Guide to RepentanceAt-Tawwabமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
المنتقمThe AvengerAl-Muntaqimபழி வாங்குபவன்
العفوThe ForgiverAl-'Afuwwமன்னிப்பளிப்பவன்
الرؤوفThe ClementAr-Ra'ufஇரக்கமுடையவன்
مالك الملكThe Owner of AllMalik-al-Mulkஅரசர்களுக்கு அரசன்
ذو الجلال و الإكرامThe Lord of Majesty and BountyDhu-al-Jalal wa-al-Ikramகண்ணியமுடையவன்
المقسطThe Equitable OneAl-Muqsitநீதமாக நடப்பவன்
الجامعThe GathererAl-Jami'ஒன்று சேர்ப்பவன்
الغنيThe Rich OneAl-Ghaniசீமான்-தேவையற்றவன்
المغنيThe EnricherAl-Mughniசீமானாக்குபவன்
المانعThe Preventer of HarmAl-Mani'தடை செய்பவன்
الضارThe Creator of The HarmfulAd-Darrதீங்களிப்பவன்
النافعThe Creator of GoodAn-Nafi'பலன் அளிப்பவன்
النورThe LightAn-Nurஒளி மிக்கவன்
الهاديThe GuideAl-Hadiநேர்வழி செலுத்துபவன்
البديعThe OriginatorAl-Badiபுதுமையாக படைப்பவன்
الباقيThe Everlasting OneAl-Baqiநிரந்தரமானவன்
الوارثThe Inheritor of AllAl-Warithஉரிமையுடைவன்
الرشيدThe Righteous TeacherAr-Rashidவழிகாட்டுபவன்
الصبورThe Patient OneAs-Saburமிகப்பொறுமையாளன்
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.