![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Lonavalamh.jpg/640px-Lonavalamh.jpg&w=640&q=50)
லோணாவ்ளா
From Wikipedia, the free encyclopedia
லோணாவ்ளா (Lonavla) ( ஒலிப்பு : Lonavla.oggⓘ ) என்பது மகாராஸ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகரம் ஆகும். இதை லோணாவாளா என்றும் அழைப்பர். ஒரு மலைவாழிடமும் நகராட்சியுமான [1] இந்நகரானது புனே நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர்கள் தொலைவிலும். மும்பை நகரிலிருந்து 96 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் மிட்டாய் உற்பத்திக்காக லோணாவ்ளா நகரம் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.'[2] மும்பை புனே நகரங்களுக்கு இடையேயான முக்கிய நகராக விள்ங்கும் இந்நகரத்தின் தொடர்வண்டி நிலையமும் இவ்விரு நகரங்களுக்கிடயேயான முக்கிய தொடர்வண்டி நிலையமாகவும் விளங்குகிறது. மும்பை – பெங்களுரு நெடுஞ்சாலையும் இந்நகரின் வழியகச் செல்கிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Lonavalamh.jpg/640px-Lonavalamh.jpg)
இந்தியக் கடற்படையின் தொழில் நுட்பப் பயிற்சி மையம் ஒன்று இந்நகரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைக்காட்சி நிலையம் ஒன்று இந்நகரத்தின் தோட்டம் ஒன்றில் மலையாள மொழியில் முதலாவது பிக் பாசு நிகழ்ச்சியை இங்கு படம்பிடித்தது.