லியோ வரத்கர்
From Wikipedia, the free encyclopedia
லியோ வரத்கர் (Leo Varadkar (Irish pronunciation: [ˈlʲoː ˈvˠaɾˠəd̪ˠkəɾˠ]; பிறப்பு 18 சனவரி 1979) என்பவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் சூன் 2017 முதல் அயர்லாந்தின் தலைமை அமைச்சராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் அயர்லாந்தின் ஃபைன் கேயல் கட்சியின் தலைவராவார். என்டா கென்னியின் ஓய்வுக்குப் பின், ஜூன் 2, 2017 இல், ஃபைன் கேயல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லியோ வரத்கர் | |
---|---|
தலைமை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 சூன் 2017 | |
குடியரசுத் தலைவர் | மைக்கேல் D. இக்கின்சு |
Tánaiste | Frances Fitzgerald Simon Coveney |
முன்னையவர் | என்டா கென்னி |
ஃபைன் கேயல் கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2017 | |
Deputy | சீமோன் கொவேனி |
முன்னையவர் | என்டா கென்னி |
சமூகப் பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 மே 2016 | |
Taoiseach | என்டா கென்னி |
முன்னையவர் | ஜோன் பர்டன் |
நலவாழ்வுத் துறை அமைச்சர் | |
பதவியில் 11 சூலை 2014 – 6 மே 2016 | |
Taoiseach | என்டா கென்னி |
முன்னையவர் | ஜேம்ஸ் ரெய்லி |
பின்னவர் | சைமன் ஹாரிஸ் |
போக்குவரத்து, சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் | |
பதவியில் 9 மார்ச் 2011 – 11 சூலை 2014 | |
Taoiseach | என்டா கென்னி |
முன்னையவர் | பேட் கேரி (போக்குவரத்து) |
பின்னவர் | பசல் டோனோஹோ |
டெச்ச்டா டாலா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2007 சூன் | |
தொகுதி | டப்ளின் மேற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சனவரி 1979 (1979-01-18) (அகவை 45) அயர்லாந்து, டப்ளின், கோல்க்னாக் |
தேசியம் | ஐரிஷ் |
அரசியல் கட்சி | ஃபைன் கேயல் |
துணை | மத்தேயு பாரெட் |
பெற்றோர் |
|
கல்வி | தி கிங்ஸ் ஹாஸ்பிடல் |
முன்னாள் கல்லூரி | டிரினிட்டி கல்லூரி |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
டெய்ல் எயிரான் ஒப்புதலின் பின்னர், ஜூன் மாதம் அவர் தாவோய்சாக்கை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் டப்ளினின் மேற்கு தொகுதியின் டீச்ச்த டாலாவாக (TD) உள்ளார். இவர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக 2011 முதல் 2014 வரையும், 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் நலவாழ்வு அமைச்சராகவும், 2016 முதல் சமூக பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். 2015 ஐரிஷ் திருமண வாக்கெடுப்பின்போது அவர் தன்னை வெளிப்படையாக தன்பாலின உறவுப் பழக்கமுள்ளவர் என அறிவித்தார்.[1]
வரத்கர் டப்ளினில் பிறந்தவர், டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இவர் 2010 இல் பொது மருத்துவர் என தகுதிபெறுவதற்கு முன் இளநிலை மருத்துவராக பல ஆண்டுகள் கழித்தார். 2004-ம் ஆண்டு ஃபிங்கல் கவுண்டி கவுன்சில் என்னும் உள்ளாட்சி சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் டெய்ல் ஈயரன்னைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு துணை மேயராக பணிபுரிந்தார்.
உள்கட்சி அழுத்தத்தால் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் என்டா கென்னி தனது கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. லியோ மற்றொரு அமைச்சரான சைமொன் கொவ்னியைத் தோற்கடித்தார். அவர் கட்சியின் 60 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய ஆதரவுடன் தலைவராகியுள்ளார். கூடிய விரைவில் அயர்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.[2] ஐரிஷ் அரசியல் கட்சியின் முதல் வெளிப்படையான தன்பாலின தலைவராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவராகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக உள்ளார்.