![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Labis_Town.jpg/640px-Labis_Town.jpg&w=640&q=50)
லாபிசு
ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
லாபிஸ், (மலாய்: Labis; ஆங்கிலம்: Labis; சீனம்: 拉美士; ஜாவி: لابيس) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு முக்கிம் தகுதி வழங்கப்பட்டு உள்ளது.
லாபிஸ் Labis | |
---|---|
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°22′N 103°01′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 422 km2 (163 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 36,053 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 85300 |
இடக் குறியீடு(கள்) | +6-07907, +6-07913, +6-07921தொலைபேசிக் குறியீடு |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
லாபீஸ் நகராட்சி Labis Municipal Council Majlis Perbandaran Labis | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 29 திசம்பர்1976 |
முன்பு | தென் சிகாமட் மாவட்ட நகராட்சி |
தலைமை | |
நகராட்சித் தலைவர் | ரூடி ரிசால் அனாபி (Rudy Rizal Mohd Hanapi) |
செயலாளர் | பசாருடின் சலாமட் (Fazaruddin Salamat) |
கூடும் இடம் | |
லாபீஸ் நகராட்சி தலைமையகம் Jalan Pejabat Kerajaan, 85300 லாபிசு, சிகாமட், ஜொகூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
தீபகற்ப மலேசியாவின் பழைய வடக்கு-தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலை, லாபிசு நகரின் வழியாகச் செல்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர்; ஜொகூர் பாரு மாநகரங்களுக்குப் பயணிப்பவர்கள் இந்த நகரைக் கடந்து செல்ல வேண்டும்.
தவிர மலேசியாவின் முதன்மைத் தொடருந்து சேவையான மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu (KTM), தெற்கில் இருக்கும் ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகருடன் இந்த நகரத்தை இணைக்கின்றது.
1900-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் பணி புரிவதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள்[1] இந்த நகரில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும், தமிழர்களின் நடமாட்டத்தையும் அதிகமாகக் காணலாம்.