சிகாமட்
ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சிகாமட் (மலாய்: Segamat; ஆங்கிலம்: Segamat; சீனம்: 昔加末); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவில் இருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இதன் எல்லை மாநிலங்களாக அமைந்துள்ளன.[1]
சிகாமட் | |
---|---|
Segamat | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 2°30′N 102°49′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
உருவாக்கம் | 1890-களில் |
பரப்பளவு | |
• மொத்தம் | 269 km2 (104 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 92,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 85xxx |
மலேசிய தொலைபேசி எண் | +60-07 |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | J |
இணையதளம் | mpsegamat |
இந்த நகரம் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்த நகரம் ஆகும். சுற்றியுள்ள நிலப் பகுதிகளில் (இ)ரப்பர், செம்பனை உற்பத்தி செய்யப் படுகின்றன. டுரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த நகரம் பெயர் போனது.
கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநகரங்களுக்கும் நடு மையத்தில் சிகாமட் நகரம் அமைந்து இருக்கிறது. அண்மையில் இந்த நகரத்திற்கு ஒரு புதிய வரவேற்பு வாசகம் வழங்கப்பட்டது. Welcome to Segamat – The Land of King of Fruits எனும் பழங்களின் அரசன் சிகாமட்டிற்கு வருக, வருக! என்பதே அந்த வாசகம்.