லபுவான் நகராட்சி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
லபுவான் நகராட்சி அல்லது லபுவான் கார்ப்பரேசன் (மலாய்: Perbadanan Labuan; (சுருக்கம்: PL) ஆங்கிலம்: Labuan Corporation); என்பது மலேசியா, லபுவான் கூட்டரசு பிரதேசத்தை (Federal Territory of Labuan) நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சிக் கழகம் (Local Authority) ஆகும்.[1]
லபுவான் நகராட்சி Labuan Corporation Perbadanan Labuan | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 2001 |
தலைமை | |
மலேசியப் பிரதமர் துறை | 02 டிசம்பர் 2022 |
தலைமை நிர்வாக அதிகாரி | ரொசிடா சாபார் (Datuk Seri Rosida Jaafar) 02 டிசம்பர் 2022 |
கூடும் இடம் | |
Wisma Perbadanan Labuan, Jalan Dewan | |
வலைத்தளம் | |
www.pl.gov.my |
இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் (Ministry of the Federal Territories) கீழ் உள்ளது. விசுமா பெர்பாடானான் லபுவான் (Wisma Perbadanan Labuan) என்று அழைக்கப்படும் அதன் தலைமை தலைமையகம் லபுவான் நகரில் டேவான் சாலையில் (Jalan Dewan) அமைந்துள்ளது.
லபுவான் நகராட்சி, 2001 சூலை 1-ஆம் தேதி; சட்டம் 609, பெர்பாடானான் லபுவான் சட்டம் 2001 (Act 609, Perbadanan Labuan Act 2001) எனும் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது லபுவான் மேம்பாட்டு ஆணையம் (Labuan Development Authority) (LDA) மற்றும் லபுவான் ஊராட்சி மன்றம் (Labuan Municipal Council) (MPL) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாகும்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.