லகாட் டத்து மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
லகாட் டத்து மாவட்டம்; (மலாய்: Daerah Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த லகாட் டத்து மாவட்டத்தின் தலைநகரம் லகாட் டத்து நகரம் (Lahad Datu Town).
விரைவான உண்மைகள் லகாட் டத்து மாவட்டம், நாடு ...
லகாட் டத்து மாவட்டம் | |
---|---|
Lahad Datu District | |
சபா | |
ஆள்கூறுகள்: 5°01′48″N 118°20′24″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | தாவாவ் |
தலைநகரம் | லகாட் டத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,444 km2 (2,874 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,29,138 |
• அடர்த்தி | 31/km2 (80/sq mi) |
இணையதளம் | ww2 ww2 |
மூடு
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1,793 கி.மீ. (1,114 மைல்) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 430 கி.மீ. (270 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லகாட் டத்து மாவட்டத்தில் 229,138 மக்கள் வசிக்கின்றனர்.