![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Portrait_of_Ruhollah_Khomeini_By_Mohammad_Sayyad.jpg/640px-Portrait_of_Ruhollah_Khomeini_By_Mohammad_Sayyad.jpg&w=640&q=50)
ரூகொல்லா கொமெய்னி
From Wikipedia, the free encyclopedia
ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, பாரசீக மொழி: سید روحالله موسوی خمینی, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் இவர் ஈரானின் அதியுயர் தலைவராக 1979 முதல் 3 சூன் 1989 வரை இருந்தார். இவருக்குப் பின்னர் ஈரானின் அதியுயர் தலைவராக 1989 முதல் அலி காமெனி பதவியில் உள்ளார்.
ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி | |
---|---|
![]() | |
1வது ஈரானிய உச்சத் தலைவர் | |
பதவியில் 3 திசம்பர் 1979 – 3 சூன் 1989 | |
முன்னையவர் | முகம்மத் ரிசா ஷா பஹ்லவி |
பின்னவர் | அலி காமெனி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1902-09-24)24 செப்டம்பர் 1902
[1][2][3][4][5] கொமெயின், ஈரான் |
இறப்பு | 3 சூன் 1989(1989-06-03) (அகவை 86) தெகுரான், ஈரான் |
தேசியம் | ஈரானியர் |
அரசியல் கட்சி | இசுலாமியக் குடியரசுக் கட்சி |
துணைவர் | கதிஜா சக்கஃபி (தி. 1929–1989) |
பிள்ளைகள் | முசுத்தபா சாரா சாதிக் பரீதா அகமது |
கையெழுத்து | ![]() |
இணையத்தளம் | www.imam-khomeini.ir |
1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,[6] இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர[7] மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்.[8].