ராபர்ட் புரூஸ்
From Wikipedia, the free encyclopedia
செ. இராபர்ட் புரூசு (C. Robert Bruce) கன்னியாகுமரி மாவட்டம் காட்டத்துறையை சேர்ந்த அரசியல்வாதி. புரூசு முதுகலைப் பட்டமும், சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வசிக்கும் புரூசு, திருநெல்வேலி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில்[1] 18 ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3] இவர் ஒரு வழக்கறிஞர்.[4]
விரைவான உண்மைகள் ராபர்ட் புரூஸ், இந்திய மக்களவை உறுப்பினர் ...
ராபர்ட் புரூஸ் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | எஸ். ஞானதிரவியம் |
தொகுதி | திருநெல்வேலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காட்டாத்துறை, கன்னியாகுமரி, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூடு