From Wikipedia, the free encyclopedia
2024 யூஈஎஃப்ஏ ஐரோப்பியக் காற்பந்து வாகை (UEFA European Football Championship, அல்லது யூஈஎஃப்ஏ யூரோ 2024 (UEFA Euro 2024) அல்லது சுருக்கமாக யூரோ 2024) என்பது யூஈஎஃப்ஏ ஐரோப்பிய காற்பந்து வாகையின் 17வது பதிப்பாகும். இது ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தினால் (யூஈஎஃப்ஏ) அதன் உறுப்பு நாடுகளின் ஆண்கள் தேசிய அணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி ஆகும். 2024 சூன் 14 முதல் 2024 சூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை செருமனி நடத்தியது. இப்போட்டியின் வெற்றியாளர் பின்னர் 2025 தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு-யூஈஎஃப்ஏ கோப்பை வாகையாளர்கள் எதிர் 2024 கோப்பா அமெரிக்கா வெற்றியாளருடன் போட்டியிடுவார். யூரோ 2024 இல் 24 அணிகள் போட்டியிட்டன, இவற்றில் சியார்சியா மட்டுமே முதல் தடவையாகப் போட்டியிட்டது.
Fußball-Europameisterschaft 2024 | |
---|---|
கால்பந்து மூலம் ஒற்றுமை. Vereint im Herzen Europas. (ஐரோப்பாவின் இதயத்தில் ஒன்றுபட்டது) | |
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | செருமனி |
நாட்கள் | 14 சூன் – 14 சூலை |
அணிகள் | 24 |
அரங்கு(கள்) | 10 (10 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | எசுப்பானியா (4-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | இங்கிலாந்து |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 51 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 117 (2.29 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 26,81,288 (52,574/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ஹாரி கேன் சியார்சசு மிக்காவுதாத்சே சமால் முசியாலா கோடி கப்கோ இவான் சிரான்சு தானி ஒல்மோ (தலா 3 கோல்கள்) |
சிறந்த ஆட்டக்காரர் | ரொட்ரி |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | இலாமின் யமால் |
← 2020 2028 → | |
ஐரோப்பிய வாகைப் போட்டிகள் செருமனியப் பகுதியில் மூன்றாவது முறையாகவும், ஒன்றிணைக்கப்பட்ட செருமனியில் இரண்டாவது முறையாகவும் நடத்தியது. யூரோ 1988 பதிப்பை மேற்கு செருமனி நடத்தியது. கிழக்கு செருமனியில் லைப்சிக் நகரில் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை, அதே போல் 2006 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்ட செருமனி தனி நாடாகச் செயல்படும் முதல் பெரிய போட்டியாகும்.[1][2] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 பதிப்பு 2021 க்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, போட்டி அதன் வழக்கமான நான்கு ஆண்டு சுழற்சிக்குத் திரும்பும்.
2020 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சமன்நீக்கி மோதலில் வெற்றி பெற்ற இத்தாலி, நடப்பு வாகையாளராக போட்டியில் நுழைந்தது.[3] இவ்வணி 16 சுற்றில் சுவிட்சர்லாந்தினால் வெளியேற்றப்பட்டது.[4] போட்டியை நடத்தும் நாடு செருமனியைக் காலிறுதியில் எசுப்பானியா வெளியேற்றியது. இறுதிப் போட்டியில் எசுப்பானியா இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து நான்காவது முறையாக ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது.[5]
பெர்லின் | மியூனிக் | டோர்ட்மண்டு | இசுடுட்கார்ட் |
---|---|---|---|
ஒலிம்பியா திடல் | அலையன்சு திடல் | வெசுட்ஃபாலென் திடல் | எம்எச்பி திடம் |
கொள்ளளவு: 70,033 | கொள்ளளவு: 66,026 | கொள்ளளவு: 61,524 | கொள்ளளவு: 50,998 |
கெல்சென்கிர்க்கென் | பிராங்க்ஃபுர்ட் | ||
ஆஃப்சால்க் திடல் | உவால்டு திடல் | ||
கொள்ளளவு: 49,471 | கொள்ளளவு: 48,057 | ||
ஆம்பர்கு | தியூசல்டோர்ஃபு | கோல்ன் | லைப்சிக் |
வோக்சுபார்க் திடல் | மெர்க்குர் திடல் | ரையின்எனெர்கி திடல் | ரெட் புல் திடல் |
கொள்ளளவு: 50,215 | கொள்ளளவு: 46,264 | கொள்ளளவு: 46,922 | கொள்ளளவு: 46,635 |
அணி | தகுதி பெற்ற வகை | தகுதி பெற்ற நாள் | போட்டியில் முந்தைய தோற்றங்கள்[upper-alpha 1] |
---|---|---|---|
செருமனி[upper-alpha 2] | புரவலர் | 27 செப்டம்பர் 2018 | 13 (1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) |
பெல்ஜியம் | குழு F வெற்றியாளர் | 13 அக்டோபர் 2023 | 6 (1972, 1980, 1984, 2000, 2016, 2020) |
பிரான்சு | குழு B வெற்றியாளர் | 13 அக்டோபர் 2023 | 10 (1960, 1984, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) |
போர்த்துகல் | குழு J வெற்றியாளர் | 13 அக்டோபர் 2023 | 8 (1984, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) |
இசுக்காட்லாந்து | குழு A இரண்டாமிடம் | 15 அக்டோபர் 2023 | 3 (1992, 1996, 2020) |
எசுப்பானியா | குழு A வெற்றியாளர் | 15 அக்டோபர் 2023 | 11 (1964, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) |
துருக்கி | குழு D வெற்றியாளர் | 15 அக்டோபர் 2023 | 5 (1996, 2000, 2008, 2016, 2020) |
ஆஸ்திரியா | குழு F இரண்டாமிடம் | 16 அக்டோபர் 2023 | 3 (2008, 2016, 2020) |
இங்கிலாந்து | குழு C வெற்றியாளர் | 17 அக்டோபர் 2023 | 10 (1968, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2012, 2016, 2020) |
அங்கேரி | குழு G வெற்றியாளர் | 16 நவம்பர் 2023 | 4 (1964, 1972, 2016, 2020) |
சிலவாக்கியா[upper-alpha 3] | குழு J இரண்டாமிடம் | 16 நவம்பர் 2023 | 5 (1960, 1976, 1980, 2016, 2020) |
அல்பேனியா | குழு E வெற்றியாளர் | 17 நவம்பர் 2023 | 1 (2016) |
டென்மார்க் | குழு H வெற்றியாளர் | 17 நவம்பர் 2023 | 9 (1964, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2012, 2020) |
நெதர்லாந்து | குழு B இரண்டாமிடம் | 18 நவம்பர் 2023 | 10 (1976, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012, 2020) |
உருமேனியா | குழு I வெற்றியாளர் | 18 நவம்பர் 2023 | 5 (1984, 1996, 2000, 2008, 2016) |
சுவிட்சர்லாந்து | குழு I இரண்டாமிடம் | 18 நவம்பர் 2023 | 5 (1996, 2004, 2008, 2016, 2020) |
செர்பியா[upper-alpha 4] | குழு G இரண்டாமிடம் | 19 நவம்பர் 2023 | 5 (1960, 1968, 1976, 1984, 2000)[upper-alpha 5] |
செக் குடியரசு[upper-alpha 3] | குழு E இரண்டாமிடம் | 20 நவம்பர் 2023 | 10 (1960, 1976, 1980, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) |
இத்தாலி | குழு C இரண்டாமிடம் | 20 நவம்பர் 2023 | 10 (1968, 1980, 1988, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020) |
சுலோவீனியா | குழு H இரண்டாமிடம் | 20 நவம்பர் 2023 | 1 (2000) |
குரோவாசியா | குழு D இரண்டாமிடம் | 21 நவம்பர் 2023 | 6 (1996, 2004, 2008, 2012, 2016, 2020) |
சியார்சியா | மிகை-ஆட்டம் வழி C வெற்றியாளர் | 26 மார்ச்சு 2024 | 0 (முதல் தடவை) |
உக்ரைன் | மிகை-ஆட்டம் வழி B வெற்றியாளர் | 26 மார்ச்சு 2024 | 3 (2012, 2016, 2020) |
போலந்து | மிகை-ஆட்டம் வழி A வெற்றியாளர் | 26 மார்ச்சு 2024 | 4 (2008, 2012, 2016, 2020) |
2022 செப்டம்பர் 20 அன்று குரோவாசியாவின் குவார் நகரத்தில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், யூரோ 2024 இற்குத் தகுதி பெறுவதில் இருந்து உருசியா விலக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது, பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது அது ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அனைத்து உருசிய அணிகளின் இடைநீக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டிலிருந்து உருசியா தவறவிட்ட முதல் ஐரோப்பிய வாகைப் போட்டி இதுவாகும்.[10][11][12][13]
குழுநிலை வெற்றியாளர்களும், இரண்டாமிடத்தில் வந்தோரும், சிறந்த நான்கு மூன்றாம் இடம் பெற்ற அணிகளும் 16 அணிகளின் சுற்றிற்கு முன்னேறும்.
அனைத்து நேரங்களும் உள்ளுர், மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+02:00) ஆகும்.
குழுப் போட்டிகளின் முடிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் புள்ளிகளில் சமமாக இருந்தால், பின்வரும் சமன்முறி அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன:[14]
குறிப்புகள்
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | செருமனி (H) | 3 | 2 | 1 | 0 | 8 | 2 | +6 | 7 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | சுவிட்சர்லாந்து | 3 | 1 | 2 | 0 | 5 | 3 | +2 | 5 | |
3 | அங்கேரி | 3 | 1 | 0 | 2 | 2 | 5 | −3 | 3 | |
4 | இசுக்காட்லாந்து | 3 | 0 | 1 | 2 | 2 | 7 | −5 | 1 |
செருமனி | 5–1 | இசுக்காட்லாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
அங்கேரி | 1–3 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
இசுக்காட்லாந்து | 1–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
சுவிட்சர்லாந்து | 1–1 | செருமனி |
---|---|---|
|
அறிக்கை |
|
இசுக்காட்லாந்து | 0–1 | அங்கேரி |
---|---|---|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | எசுப்பானியா | 3 | 3 | 0 | 0 | 5 | 0 | +5 | 9 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | இத்தாலி | 3 | 1 | 1 | 1 | 3 | 3 | 0 | 4 | |
3 | குரோவாசியா | 3 | 0 | 2 | 1 | 3 | 6 | −3 | 2 | |
4 | அல்பேனியா | 3 | 0 | 1 | 2 | 3 | 5 | −2 | 1 |
எசுப்பானியா | 3–0 | குரோவாசியா |
---|---|---|
|
அறிக்கை |
குரோவாசியா | 2–2 | அல்பேனியா |
---|---|---|
|
அறிக்கை |
|
எசுப்பானியா | 1–0 | இத்தாலி |
---|---|---|
|
அறிக்கை |
அல்பேனியா | 0–1 | எசுப்பானியா |
---|---|---|
அறிக்கை |
|
குரோவாசியா | 1–1 | இத்தாலி |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 3 | 1 | 2 | 0 | 2 | 1 | +1 | 5 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | டென்மார்க் | 3 | 0 | 3 | 0 | 2 | 2 | 0 | 3[a] | |
3 | சுலோவீனியா | 3 | 0 | 3 | 0 | 2 | 2 | 0 | 3[a] | |
4 | செர்பியா | 3 | 0 | 2 | 1 | 1 | 2 | −1 | 2 |
சுலோவீனியா | 1–1 | டென்மார்க் |
---|---|---|
|
அறிக்கை |
|
செர்பியா | 0–1 | இங்கிலாந்து |
---|---|---|
அறிக்கை |
|
சுலோவீனியா | 1–1 | செர்பியா |
---|---|---|
|
அறிக்கை |
|
டென்மார்க் | 1–1 | இங்கிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஆஸ்திரியா | 3 | 2 | 0 | 1 | 6 | 4 | +2 | 6 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | பிரான்சு | 3 | 1 | 2 | 0 | 2 | 1 | +1 | 5 | |
3 | நெதர்லாந்து | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 0 | 4 | |
4 | போலந்து | 3 | 0 | 1 | 2 | 3 | 6 | −3 | 1 |
போலந்து | 1–2 | நெதர்லாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
நெதர்லாந்து | 2–3 | ஆஸ்திரியா |
---|---|---|
|
அறிக்கை |
|
பிரான்சு | 1–1 | போலந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | உருமேனியா | 3 | 1 | 1 | 1 | 4 | 3 | +1 | 4 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | பெல்ஜியம் | 3 | 1 | 1 | 1 | 2 | 1 | +1 | 4 | |
3 | சிலவாக்கியா | 3 | 1 | 1 | 1 | 3 | 3 | 0 | 4 | |
4 | உக்ரைன் | 3 | 1 | 1 | 1 | 2 | 4 | −2 | 4 |
பெல்ஜியம் | 0–1 | சிலவாக்கியா |
---|---|---|
அறிக்கை |
|
சிலவாக்கியா | 1–2 | உக்ரைன் |
---|---|---|
|
அறிக்கை |
|
சிலவாக்கியா | 1–1 | உருமேனியா |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | போர்த்துகல் | 3 | 2 | 0 | 1 | 5 | 3 | +2 | 6[a] | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | துருக்கி | 3 | 2 | 0 | 1 | 5 | 5 | 0 | 6[a] | |
3 | சியார்சியா | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 0 | 4 | |
4 | செக் குடியரசு | 3 | 0 | 1 | 2 | 3 | 5 | −2 | 1 |
துருக்கி | 3–1 | சியார்சியா |
---|---|---|
|
அறிக்கை |
|
போர்த்துகல் | 2–1 | செக் குடியரசு |
---|---|---|
|
அறிக்கை |
|
சியார்சியா | 1–1 | செக் குடியரசு |
---|---|---|
|
அறிக்கை |
|
துருக்கி | 0–3 | போர்த்துகல் |
---|---|---|
அறிக்கை |
|
சியார்சியா | 2–0 | போர்த்துகல் |
---|---|---|
|
அறிக்கை |
செக் குடியரசு | 1–2 | துருக்கி |
---|---|---|
|
அறிக்கை |
|
நிலை | குழு | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | D | நெதர்லாந்து | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 0 | 4[a] | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | F | சியார்சியா | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 0 | 4[a] | |
3 | E | சிலவாக்கியா | 3 | 1 | 1 | 1 | 3 | 3 | 0 | 4 | |
4 | C | சுலோவீனியா | 3 | 0 | 3 | 0 | 2 | 2 | 0 | 3 | |
5 | A | அங்கேரி | 3 | 1 | 0 | 2 | 2 | 5 | −3 | 3 | |
6 | B | குரோவாசியா | 3 | 0 | 2 | 1 | 3 | 6 | −3 | 2 |
வெளியேற்ற நிலைக் கட்டத்தில், வழமையான ஆட்ட நேரத்தின் முடிவில் ஒரு போட்டி சமநிலையில் இருந்தால், கூடுதல் நேரம் விளையாடப்படும் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் இரண்டு காலங்கள்). கூடுதல் நேரத்திற்குப் பிறகும் சமநிலையில் இருந்தால், போட்டி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்படும்.[14] போட்டியில் வெற்றிபெறும் அணி பின்னர் 2025 கொன்மிபோல்-யூஈஎஃப்ஏ வாகைக் கிண்ணத்திற்காக 2024 கோப்பா அமெரிக்காவில் வெற்றிபெறும் அணியுடன் போட்டியிடும்.
யூரோ 1984 முதல் மூன்றாம் இடத்திற்கான போட்டி இடம்பெறமாட்டாது.
சுற்று 16 | காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதி | |||||||||||
30 சூன் – கோல்ன் | ||||||||||||||
எசுப்பானியா | 4 | |||||||||||||
5 சூலை – இசுடுட்கார்ட் | ||||||||||||||
சியார்சியா | 1 | |||||||||||||
எசுப்பானியா (கூ.நே.) | 2 | |||||||||||||
29 சூன் – டோர்ட்மண்டு | ||||||||||||||
செருமனி | 1 | |||||||||||||
செருமனி | 2 | |||||||||||||
9 சூலை – மியூனிக் | ||||||||||||||
டென்மார்க் | 0 | |||||||||||||
எசுப்பானியா | 2 | |||||||||||||
1 சூலை – பிராங்க்ஃபுர்ட் | ||||||||||||||
பிரான்சு | 1 | |||||||||||||
போர்த்துகல் (சநீ) | 0 (3) | |||||||||||||
5 சூலை – ஆம்பர்கு | ||||||||||||||
சுலோவீனியா | 0 (0) | |||||||||||||
போர்த்துகல் | 0 (3) | |||||||||||||
1 சூலை – தியூசல்டோர்ஃபு | ||||||||||||||
பிரான்சு (சநீ) | 0 (5) | |||||||||||||
பிரான்சு | 1 | |||||||||||||
14 சூலை – பெர்லின் | ||||||||||||||
பெல்ஜியம் | 0 | |||||||||||||
எசுப்பானியா | 2 | |||||||||||||
2 சூலை – மியூனிக் | ||||||||||||||
இங்கிலாந்து | 1 | |||||||||||||
உருமேனியா | 0 | |||||||||||||
6 சூலை – பெர்லின் | ||||||||||||||
நெதர்லாந்து | 3 | |||||||||||||
நெதர்லாந்து | 2 | |||||||||||||
2 சூலை – லைப்சிக் | ||||||||||||||
துருக்கி | 1 | |||||||||||||
ஆஸ்திரியா | 1 | |||||||||||||
10 சூலை – டோர்ட்மண்டு | ||||||||||||||
துருக்கி | 2 | |||||||||||||
நெதர்லாந்து | 1 | |||||||||||||
30 சூன் – கெல்சென்கிர்ச்சென் | ||||||||||||||
இங்கிலாந்து | 2 | |||||||||||||
இங்கிலாந்து (கூ.நே.) | 2 | |||||||||||||
6 சூலை – தியூசல்டோர்ஃபு | ||||||||||||||
சிலவாக்கியா | 1 | |||||||||||||
இங்கிலாந்து (சநீ) | 1 (5) | |||||||||||||
29 சூன் – பெர்லின் | ||||||||||||||
சுவிட்சர்லாந்து | 1 (3) | |||||||||||||
சுவிட்சர்லாந்து | 2 | |||||||||||||
இத்தாலி | 0 | |||||||||||||
சுவிட்சர்லாந்து | 2–0 | இத்தாலி |
---|---|---|
|
அறிக்கை |
செருமனி | 2–0 | டென்மார்க் |
---|---|---|
|
அறிக்கை |
இங்கிலாந்து | 2–1 (கூ.நே) | சிலவாக்கியா |
---|---|---|
|
அறிக்கை |
எசுப்பானியா | 4–1 | சியார்சியா |
---|---|---|
|
அறிக்கை |
|
போர்த்துகல் | 0–0 (கூ.நே) | சுலோவீனியா |
---|---|---|
அறிக்கை | ||
ச.நீ | ||
|
3–0 |
|
உருமேனியா | 0–3 | நெதர்லாந்து |
---|---|---|
அறிக்கை |
|
எசுப்பானியா | 2–1 (கூ.நே) | செருமனி |
---|---|---|
|
அறிக்கை |
|
போர்த்துகல் | 0–0 (கூ.நே) | பிரான்சு |
---|---|---|
அறிக்கை | ||
ச.நீ | ||
|
3–5 |
|
இங்கிலாந்து | 1–1 (கூ.நே) | சுவிட்சர்லாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
ச.நீ | ||
|
5–3 |
|
நெதர்லாந்து | 2–1 | துருக்கி |
---|---|---|
|
அறிக்கை |
|
எசுப்பானியா | 2–1 | பிரான்சு |
---|---|---|
|
அறிக்கை |
|
நெதர்லாந்து | 1–2 | இங்கிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
2024 சூலை 14 ஞாயிற்றுக்கிழமை செருமனியின் பெர்லின் நகரில் உள்ள ஒலிம்பியா திடலில் இறுதிப் போட்டி நடைபெற்றது. ஐந்தாவது இறுதிப் போட்டியில் எசுப்பானியாவும், இரண்டாவது இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் போட்டியிட்டன. வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற முக்கிய ஆண்கள் போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து விளையாடியது இதுவே முதற் தடவையாகும்.[65][66]
65,600 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பாதி இலக்குகள் இல்லாமல் முடிந்தது. எசுப்பானியாவின் ரோட்ரி பாதி நேரத்திற்கு முன்பே காயமடைந்து வெளியேறினார். இரண்டாவது பாதியில் எசுப்பானியாவின் லாமின் யமலின் உதவியுடன் நிக்கோ வில்லியம்சு முதல் இலக்கை அடித்தார். இரண்டாவது பாதியில் எசுப்பானியாவுக்கு இலக்கு அடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன, அதற்கு முன்னர் கோல் பால்மர் இங்கிலாந்துக்காக ஒரு இலக்கை 1-1 என சமனாக்கினார். போட்டி முடிய நான்கு நிமிடங்களில் எசுப்பானியாவிற்காக மிக்கேல் ஓயர்சபால் ஒரு இலக்கை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியின் நாயகனாக நிக்கோ வில்லியம்சும், மொத்தச் சுற்றின் நாயகன் விருதை ரோட்ரியும் பெற்றனர். லாமின் யமல் சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றார்.
1964, 2008 மற்றும் 2012 இற்குப் பிறகு, எசுப்பானியா நான்காவது தடவையாக வென்றதன் மூலம், அது செருமனியை விஞ்சியது. 1984 இல் பிரான்ஸ் ஐந்து ஆட்டங்களையும் வென்றதற்குப் பிறகு, 2024 இல் முதற்தடவையாக எசுப்பானியா ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டு யூரோ இறுதிப் போட்டிகளில் நான்காவது அணியாகத் தோற்றது.[67]
எசுப்பானியா | 2–1 | இங்கிலாந்து |
---|---|---|
|
அறிக்கை |
|
51 ஆட்டங்களில் 117 இலக்குகள் எடுக்கப்பட்டன, சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.29 இலக்குகள்.[69]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.