முத்துராமலிங்கத் தேவர்
"தேசியம் என் உடல்; தெய்வீகம் என் உயிர்" என்ற இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.[1][2]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் | |
---|---|
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தபால் தலை | |
பிறப்பு | பசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர் (1908-10-30)30 அக்டோபர் 1908 பசும்பொன், இராமநாதபுரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 30 அக்டோபர் 1963(1963-10-30) (அகவை 55) |
கல்லறை | பசும்பொன், இராமநாதபுரம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | தெய்வத் திருமகன் |
பணி | விவசாயம், அரசியல்வாதி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு 1939 வரை அனைத்திந்திய பார்வார்டு பிளாக் |
சமயம் | இந்து |
பெற்றோர் | உக்கிரபாண்டி தேவர் இந்திராணி அம்மையார் |
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[3][4][5]
1957-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.