முதுமலை தேசியப் பூங்கா
இந்தியாவின், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், நீலமலைகளில் அமைந்துள்ள 'முதுமலை புலிகள் காப From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், நீலமலைகளில் அமைந்துள்ள 'முதுமலை புலிகள் காப From Wikipedia, the free encyclopedia
முதுமலை தேசிய பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகம் (Mudumalai National Park) ஆனது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940-இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும்.
முதுமலை தேசியப் பூங்கா | |
---|---|
முதுமலை புலிகள் உய்வகம் | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
முதுமலை யானை முகாமில் வளர்ப்பு யானை | |
அமைவிடம் | நீலகிரி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
அருகாமை நகரம் | கூடலூர், நீலகிரி |
ஆள்கூறுகள் | 11°35′N 76°33′E |
பரப்பளவு | 321 km2 (124 sq mi) |
ஏற்றம் | 850–1,250 m (2,790–4,100 அடி) |
நிறுவப்பட்டது | 1940 |
நிருவாக அமைப்பு | தமிழ்நாடு வனத்துறை |
வலைத்தளம் | https://www.forests.tn.gov.in/ |
தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956-ஆம் ஆண்டு 295 கி.மீ.2 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கி.மீ.2 பரப்பளவை அடைந்துள்ளது. மேலும் இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
முதுமலை சங்ககாலத்தில் முதிரமலை என வழங்கப்பட்டது. குமணன், இளங்குமணன் ஆகிய வள்ளல்கள் மன்னர்களாகவும் விளங்கி இந்த நிலப்பகுதியை ஆண்டுவந்தனர்.
இக்காப்பகத்தில் முதுமலை தேசிய வனப்பூங்கா 103 கிமீ2 பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் கேரளாவில் வயநாடு வனவிலங்கு காப்பகமும் உள்ளன.
முதுமலை வனவிலங்கு காப்பகம் உதகமண்டலத்ததிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ளது.
மோயாறு, இக்காப்பகத்தின் ஊடாக செல்லுகிறது. இங்குள்ள யானைகள் முகாம் பார்வையாளர்களைக் கவரும் ஒன்றாகும்.
யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன.
மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, தேன் பருந்து, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் இங்கு உள்ளன.
இங்கு மூன்று வகையான காடுகள் காணப்படுகின்றன. அவை:
இந்த தேசியப் பூங்காவில் மழைப் பொழிவு அதிகமுள்ள மேற்குப் பகுதியில் ஈர இலையுதிர் காடுகளும், மழைப் பொழிவு குறைந்த கிழக்குப் பகுதியில் உலர் இலையுதிர் காடுகளும் காணப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.