மிலன் மேளா
இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஒரு கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
மிலன் மேளா (Milan Mela) இந்தியாவின் கொல்கத்தா நகரில் முதன்மை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமாக திகழ்கிறது. 31,894 சதுர மீட்டர் (343,300 சதுர அடி) பரப்பளவு கொண்ட கண்காட்சி இடத்தைக் கொண்ட கொல்கத்தாவின் மிகப்பெரிய கண்காட்சி மையமாக இது கருதப்படுகிறது. [1] மிலன் மேளா வளாகம் மேற்கு வங்க அரசாங்கத்தின் மேற்கு வங்க வர்த்தக மேம்பாட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும். இவ்வமைப்பே வளாகத்தை நிர்வகிக்கவும் செய்கிறது. மேற்கு வங்க வர்த்தக மேம்பாட்டு அமைப்பு என்பது மேற்கு வங்கத்திற்கான வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை முன்னெடுத்த ஒரு முயற்சியாகும்.